வெள்ளி, 16 ஜனவரி, 2009

வாலறிவன் - திருக்குறள் ( 2)

ஆதிபகவனின் அறிவு வாலறிவு. நம் அறிவு சிற்றறிவு.
வால் =வலிமை (வாலிபன், வாலைக் குமரி, )
வால் =வாலுத்தனம் (மழையும், வெயிலும், புயலும், மண்ணும், விண்ணாகிய உயிரும் நம்மிடம் வாலுத்தனம் செய்மின்றன. இதுவும் வாலறிவு)
வால் =வெண்மை (வால் வளை =வெண்சங்கு -புறநானூறு 158)
(வால் வெள் அருவி =வெண்மையாகத் தோன்றும் தூய அருவி -அகநானூறு 308)
வால் =தூய்மை (வாலாமை நாள் =மகளிர் தூய்மை இல்லாத மாதவிடாய் நாள் -சிலப்பதிகாரம் 15-24)
இப்படியும் எப்படியும் இருப்பதுதான், இயங்குவதுதான் வாலறிவு
------------------------------------------------------------