புதன், 20 ஜனவரி, 2010

கா


கா என்றால் காடு
கா என்றால் காப்பாற்று
நாம் வெளிவிடும் கரிக்காற்றை வாங்கிக்கொண்டு நமக்கு உயிர்க்காற்றைத் தருவது மரமடர்ந்த காடு.
உணவு தந்தது காடு.
நம்மைக் காப்பாற்றுவது காடு
நாம் காப்பாற்ற வேண்டியது காடு
அதனால்தான் காட்டைக் 'கா' என்றனர்

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நம்தெய்வம்

எழுதிக் குவிக்கும் வல்லவரே
எழுத்தைப் படிக்கும் நல்லவரே
உழுது வாழும் உழைப்பால்தான்
உண்டு மகிழ்வீர் மறவாதீர்.

பொங்கல் உழவர் திருநாளா
பொங்கல் உழவர்த் தொழுநாளா
(=பொங்கல் உழவரைத் தொழும் நாளா)
எங்கும் இன்பம் எதனாலே
ஏரோர் தந்த கொடையாலே

சேற்றில் காலை வைப்பவரால்
தேசப் பசிநோய் நீங்கிவிடும்
சோற்றில் கையை வைத்திடலாம்
தொழுவோம் உழவே நம்தெய்வம்

வெள்ளி, 1 ஜனவரி, 2010

Fentacy - மாயை - உயர்வு, தாழ்வு

2 இது பெரியதா? அல்லது சிறியதா?
1 சொல்கிறது - 2 பெரியது.
3 சொல்கிறது - 2 சிறியது.
உலகியலும் அபபடித்தான்.
வேலனை இருவர் பார்க்கின்றனர்
கந்தன் சொல்கிறான் - வேலன் பெரியவன்.
முருகன் சொல்கிறான் - வேலன் சிறியவன்.
இப்போது நீங்கள் சொல்லுங்கள் - வேலன் பெரியவனா? இல்லை சிறியவனா?
எல்லாம் மனம் செயயும் மாயை.
உலகில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனறு யாரும் இல்லை.