செய்வோம் (செய் வ் ஓம்) என்னும்போது வரும் ஓம் என்பதுதான் ஓம் மந்திரம்.
நீயும், நானும், அவனும் செய்வோம்.
கூடிச் செய்வதை உணர்த்துவது ஓம்.
அவன் அண்டத் தொகுதியோடு கூடி இருந்துகொண்டு செய்யும் செயலும், இயங்கும் இயல்பும் ஓம்.
தமிழியல் தரும் விளக்கம் இது.
ஓம் என்னும் மந்திரத்தின் பொருளைச் சொல்லவில்லை என்பதற்காக முருகன் பிரமனைச் சிறையில் அடைத்தான் என்பது பழங்கதை.