சனி, 17 ஜனவரி, 2009

அறவாழி அந்தணன் -திருக்குறள் (8)

ஆற்று நீரை அறுத்து வயலுக்குப் பாய்ச்சுவது போல் இயல்பாக ஓடும் உணர்வுகளை நல்லவை விளையப் பாய்ச்சுவது அறம்.
ஆழி =வண்டிச்சக்கரம் =நிலப் பரப்பைச் சுற்றி உருளும் கடல்.
அறத்தை உருளச் செய்பவன் அந்தணன்.
(அந்தணர் என்போர் அறவோர் - குறள் 30)
அரசு =ஆளும் தொகுதி
பொதுக்கூட்டம் ஒன்றில் அவைத் தலைவனும் பேச்சாளனும் கூட்டத்தை ஆள்வது போன்று நாட்டை அரசு ஆள்கிறது. அரசனும் ஓர் இறைவன். அரசின் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் வாழ்பவர்களும் நாட்டில் உண்டு. கடவுளாகிய இறைவன் ஆட்சியில் இந்த நிலை இல்லை. இவன் அறச் சக்கரத்தை உருட்டும் அந்தணன்.