கடவுள் எங்கோ இருக்கிறார் என்றும் நமக்குள் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இல்லை என்பாருக்கு ஒரு வினா. நீ யார்? கடவுளின் ஒரு கூறுதானே!
மழை நம் கட்டுப்பாட்டில் இல்லை.இது நம்மைக் கடந்து உள்ள கடவுள்.
மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. என்றாலும் மடைமாற்றம் செய்யலாம்.இது நமக்குள் உள்ள கடவுள். கடவாக உள்ள கடவுள். கடவு என்னும் சொல்லுக்குத் தமிழில் வழி என்று பொருள். இப்படி நாமாக, நமக்குள் வழியாக, நம்மை ஆட்டிப் படைக்கும் மழை போன்றவைகளாக உள்ள கடவுளை இல்லை என்பது விந்தை.