சனி, 17 ஏப்ரல், 2010

நாம் கடவுள்

கடவுளை 'அடைவது' என்கிற சமயக் கோட்பாட்டைவிட, கடவுளாக 'ஆவது' என்கிற அத்வைதத்தை உலகம் வரவேற்கும்.

- அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் - தமிழர் பண்டாடு - மாதஇதழ் - ஏப்ரல் 2010

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

பெண் - பேண்


கண் - காண் - காண்பது
பெண் - பேண் - பேணுபவர்

உண் - ஊண் - உண்ணும் உணவு
பண் - பாண் - பாடுபவர்
மண் - மாண் - தாங்கித் தழையவைக்கும் மாண்பினை உடையது

மின் - மீன் - வானிலும் நீரிலும் மின்னுவது

பெண்ணின் பெருமை


பெண்ணின் பெருமை எதற்காக
பேசித் திரிவோம் அதற்காக
கண்கள் இரண்டில் எதுபெரிது
காணும் போது சிறப்பெய்தும்

உயிரா உடலா எதுமுந்தி
ஒன்றிக் கிடக்கும் வான்வெளியில்
வெயிலா நிழலா எதுவேண்டும்
விலக்கிப் பார்ப்ப தெப்படியோ

நீயா நானா யார்பெரியர்
நினைத்துப் பார்க்க முடியாது
நீயில் லாமல் நானில்லை
நெஞ்சுக் குள்ளே நாமிருவர்