கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய ஐந்தும் பொறிகள், காணல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுஉணர்வு ஆகிய ஐந்தும் அப் பொறிகளின் வாயில்கள். இறைவன் தன்னைக் காணமுடியாதபடி நம்மிடமுள்ள இந்த ஐந்து வாயில்களையும் அவித்து வைத்துள்ளான்.
அவித்த பயறு முளைக்காது. அதுபோல, புலன்களால் இறைவனை உணர முடியாது.
புலன்களின் பதிவு மனம். மனம் தன் பதிவுகளைக் கொண்டு பதியாத ஒன்றைக் கற்பனை செய்யும். அப்படிக் கற்பனை செய்யப்பட்டதுதான் இன்று உலகம் வணங்கும் கடவுள். அவன் நம் அறிவையும், அது பதிந்துள்ள மனத்தையும் கடந்தவன். அவற்றின் உயிராக இருந்துகொண்டு வழிநடத்துபவன். (கடவு =வழி)