ஞாயிறு, 18 ஜனவரி, 2009

133 பத்து -எண்ணிக்கை

திருக்குறளில் 133 அதிகாரக்கள். 1330 குறள்கள். இந்த எண்ணிக்கைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தமிழில் மொத்தமுள்ள நெடில் எழுத்துக்கள் 133. எனவே திருக்குறள் 133 பத்துக்களால் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் முனைவர். மு. இளங்கண்ணன். (நூல்଻ திருக்குறளின் வடிவமைப்பும் திட்டமும் செயல்திறனும் - பதிப்பு 2002. பக்கம் 33)
உயிரெழுத்து நெடில் 7. உயிர்மெய் எழுத்து நெடில் 18 பெருக்கல் 7 =126.
7ஐயும் 126ஐயும் கூட்டினால் 133.
இது ஆய்ந்து தோய்ந்த விளக்கம். அரிய உண்மை.