கடவுளைப் பார்க்கலாம்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கிறோம். காதுக்கு எட்டிய தூரம் வரை கேட்கிறோம். மூக்குக்கு எட்டிய தூரம் வரை முகர்கிறோம். வாயில் பட்டால் சுவைக்கிறோம். மெய்யில் படும் குளிர் சூடு போன்றவற்றையும் உணர்கிறோம். இப்படி மனத்தில் பட்டதைக் கற்பனைக்கு எட்டிய தூரம் வரை கடவுளைக் காணலாம்.
நமது முதுகைக் கண்ணாடியில் பார்த்தாலும், நாம் உண்ணும் உணவு நமக்குச் சத்தாக மாறுவதைப் பார்க்க முடியவில்லை. இதனைச் செய்யும் உயிர் எந்திரமாகிய கடவுளை நம்மால் பார்க்க இயலாது.