அ -எழுத்து எழுத்துக்களின் முதல். அது போல ஆதிபகவன் உலகுக்கு முதல்.
தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து 30. உயிர் எழுத்து 12. மெய் எழுத்து 18. ஆக 30.
சொல்லமைதியில் சார்பெழுத்துக்கள் தோன்றும்.
முதலெழுத்து 30-ல் முதலாவதாக வருவது அ.
ஆதி = capital
A to Z(26) are the capital letters of the small letters (a to z)
As 'A' is the capital of the following all letters, 'He' is the capital of 'organism and isoganism'. 'organism with isoganism'.
ஆதி = organism, the totality of the universe
பகவன் = isoganism, the particles and movements of an atom
முதல் போட்டு வணிகம் செய் (முதல் =மூலதனம்)
முதலமைச்சர் (முதல் =தலைமை) (முதலெழுத்து =தலையெழுத்து) (அவன் நம் தலையெழுத்து)
முதலில் வருபவன் யார்? (முதல் =இடத்தில் முதன்மை)
முதல் மதிப்பெண் (முதல் =உயர்வு)
முதல் மனிதன் (முதல் =ஆதி)
விளைச்சலுக்கு முதல் விதை (முதல் =மூலம்)
கந்தன், கடம்பன் முதலானவை முருகனின் பெயர்கள் (முதல் =முதலோடு வருபவை)
இப்படியெல்லாம் முதல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அ -எழுத்து உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் முதலாய் இருப்பது போல, ஆதிபகவன் உலகுக்கு முதலாக இருக்கிறான். நம் உயிருக்கும் உடலுக்கும் முதல் அவன். உயிரும் உடலும் இணைந்து செய்யும் வினைக்கும் முதல் அவன். நமது ஐம்புல உணர்வைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் மனமும் அவன். அப் பதிவை விரித்துக் காட்டும் அறிவும் அவன். அறிவை உரசிப் பார்க்கும் கற்பனையும் அவன். மற்றும் ஒருவனுக்குள்ள குணமும் அவன். ஒவ்வொருவரும் தேடும் புகழும் அவன். இவற்றின் விரிவை அடுக்கிக் காட்டுவனவே முதல் 10 குறள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.