பிறந்தோம். இறப்போம். இடைக் காலத்தில் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையை வள்ளுவர் பிறவி என்கிறார். பல பிறவிகள் உண்டு என்று நம்புவார்க்கு அவை கடலாக இருந்துவிட்டுப் போகட்டும்.
இறைவனது திருவடிகளை நாம் சுமந்தால் அவர் நம்மைத் தாங்கிக்கொள்வார்.
வாழ்க்கை ஒரு கடல். அதில் செல்வதற்கு ஒரு மிதவை வேண்டும். அந்த மிதவை இறைவனடி. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டுக் கடமையைச் செய்தால் வாழ்வு எளிதாகும் என்பது அறிவியல் கண்ணோட்டக் கருத்து. மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கைக் கருத்து.