பொருளில் அடையும் வேறுபாட்டை வேற்றுமை என்கிறோம்.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வேற்றுமை 7 என்றனர்.
தொல்காப்பியர் விளி வேற்றுமையைச் சேர்த்து 8 என்றார்.
1 பொருளின் இருப்பு அல்லது இயங்கு நிலை
2 பொருள் பயன்படு நிலை
3 பொருளோடு பொருள் இணைதல் (1-ஓடு தொடர்புடையது), பொருளைப் பயன்படுத்துதல் (2-ஓடு தொடர்புடையது) ஆகிய 2 நிலைகள்
4 பொருளுக்குக் கொடுக்கும் நிலை
5 பொருளிலிருந்து விலகும் நிலை
6 பொருள் பெற்றிருக்கும் தன்மை
7 பொருள் இருக்கும் இடம்
8 பொருளை அழைத்தல்
---
எடுத்துக்காட்டுகள்
1 பழம் இனிக்கும். -பழம் விழுந்தது. -பழம் நன்று
2 பழத்தைச் சாப்பிடு.
3 பழத்தொடு பால் சேர். -பழத்துடன் பாலும் வந்தது. பழத்தால் என்ன செய்யலாம்?
4 பழத்துக்குப் பாதுகாப்பு உண்டா? -பழத்துக்குப் பக்கத்தில் -பழத்துக்கு நிகர் உண்டா?
5 பழத்திலுருந்து சாறு பிழி. விதையிலிருந்து செடி முளைக்கும்.
6 பழத்தினது தோல். -பழத்தினுடைய சுவை
7 பழத்தின்மேல் ஈ -பழத்துக்குள் கொட்டை
8 பழமே!