செவ்வாய், 27 ஜனவரி, 2009

திருமுருகாற்றுப்படை (செய்தி ஓட்டச் சுருக்கம்)


முதுவாய் இரவல!(ன்)(அடி 284) செவ்வேள் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு ( 61)
செலவு நீ நயந்தனை ஆயின் (64)
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே (66)

கூடல் குடவயின் (71) குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று, (77)
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதாஅன்று (125),
ஏரகத்து உறைதலும் உரியன், அதாஅன்று (188),
ஆவினன்குடி அசைதலும் உரியன். அதாஅன்று (176),
தோள் பல் பிணை தழீஇ குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே, அதாஅன்று (217)
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியன் நகர் (244)ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே (249)
இழும் என இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலை கிழவோனே (317)

அதாஅன்று = அதுவுமல்லாமல்

1 திருப்பரங்குன்றம், 2 திருச்சீர் அலைவாய், 3 திரு ஏரகம், 4 திரு ஆவினன்குடி, 5 குன்றிருக்கும் இடமெல்லாம் தோள்பிணை தழுவி துணங்கை ஆடல், 6 முருகனுக்கு விழாக் கொண்டாடும் இடமெல்லாம் உறைவான். (அவன் யார்?) பழமுதிர் சோலை மலைகிழவோன்

வலன் ஏர்பு திரிதரு ... ஞாயிறு கடல் கண்டு ஆங்கு (1),மனன் ஏர்பு திரிதரு வால் நிற முகனே (90)

வலனேர்பு (வலன் ஏர்பு, வலன் நேர்பு) திரிதரு ஞாயிறு (1)
மனனேர்பு (மனன் ஏர்பு, மனன் நேர்பு) எழுதரு (ஆறு)முகன் (90)

ஞாயிறு வானில் திரிவது போல, முருகன் மனத்தில் எழுகிறான்.