நமக்கு உடலும் உயிரும் உண்டு. இரண்டும் செம்மையாக இயங்கும்போது உணர்வு இருக்கும். உணர்வு பொங்குவதை உணர்ச்சி என்கிறோம். சூழல் ஐம்புலனில் மோதும். மோதும் சூழலைப் பொறிகள் (orgones) உணர்வது புலன் (sense). புலன் மனத்தில் பதியும். நாம் அந்தப் பதிவுகளைத் தட்டி எழுப்புவதை எண்ணம் (thought) என்கிறோம். எண்ணம் மலரும். மலர்ந்தவை ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதை அறிவு (knowledge) என்கிறோம்.
புலன்களில் பதிவது உடலின்பம். பாலின்பம், பாட்டுக் கேட்டல், பழம் சுவைத்தல் போன்றவை உடலின்பம்.
அறிவின்பம் புகழால் வரும். செயலில் வெற்றி பெறும்போது புகழ் வருகிறது. கொடையால் புகழ் வருகிறது. இது உயிர் பெறும் உன்பம்.
உடலைச் சுட்டெரித்த பின்னரும் புகழ் அந்த உயிரைத் தாக்கும். காந்தியை நாம் புகழ்வது போன்றது அது. ஆனால் உடலைப் பிரிந்த உயிர் அந்தப் புகழ்ச்சியை உணரப் போவதில்லை.
புகழ்பவருக்குப் புகழ் வரலாம். அதுவும் கேட்போரைப் பொருத்தே இருக்கும்.
புலனின்பம், புகழின்பம் இரண்டையும் நாம் தேடுகிறோம். எதையும் ஒதுக்குவது இல்லை.