செவ்வாய், 20 ஜனவரி, 2009

நமசிவாய

நமசிவாய - சிவாய(ம்)நம
சிவ் < சிவன் < சிவம் ஆயம் = சிவாயம்
நம = நம்முடையவை
என் கை என்றால் என் கைகளில் ஒன்று.
என கை என்றால் என் இரண்டு கைகளும்
செய்தன (செய் த் அன் அ) என்பதில் அ பன்மையை உணர்த்துகிறது.
(ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும், பன்மைக்கு அவ்வும் உருபு ஆம் - நன்னூல் 299)
(உய்த்துச் சொரியினும் போகா தம - திருக்குறள் 376)
(தம போகா = தம்முடையவை போகமாட்டா)
எம = எம்முடையவை
நும = உம்முடையவை
நம = நம்முடையவை
சிவ ஆயம் நம்முடையவை.
(சிவம் - காண்க)