செவ்வாய், 22 டிசம்பர், 2009

கண்ணனும் சேலையும்

யமுனையில் குளித்த இடையர் பெண்களின் சேலையைத் திருடி மரத்தின்மேல் வைத்துக்கொண்டு கண்ணன் அப்பெண்களள அம்மணமாகப் பார்த்தான் என்கிறது பாகவதக் கதை. திருமால் அந்தப் பெண்களுக்குத் தழையாடை தைப்பதற்காக அவர்களாகவே தழை பறித்துக் கொள்ளும் வகையில் மரத்தை வளைத்துக் கொடுத்தான் என்கிறது சங்கப் பாடல்.
பெண்யானைக்கு ஆண்யயனை யா மரத்தை வளைத்துத் தின்னத் தருவது போல மாஅல் மரத்தை வளைத்துத் தந்தானான் என்கிறது சங்கப்பாடல்.

வடாஅது
வண்புனல் தொழுநை  வார்மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பபடி உணீஇயர் அங்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே  - (அகநானூறு 59. மருதன் இளநாகனார்.)

புதன், 16 டிசம்பர், 2009

fantasy கற்பனை

fantasy கற்பனை
வாழ்க்கையைப் பற்றிய கற்பனை வளம் தரும்.
கடவுளைப் பற்றிய கற்பனை காலத்தை வீணாக்கும்.
காலத்தைக் கரியாக்கக் கூடாது.
கனியாக்கிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திங்கள், 7 டிசம்பர், 2009

Heaven - முற்று - முற்றி - முத்தி - முக்தி

Heaven - முற்று - முற்றி - முத்தி - முக்தி
முற்றுப்புள்ளி வைத்த்தால் வாக்கியம் முடிந்தது என்று பொருள்.
பாடலின் இறுதியில் முற்றும் என்று எழுதுவார்கள்.
காய் முற்றினால் பழுத்தோ, நெற்றாகியோ அறுந்து விழுந்துவிடும்.
இப்படி முற்றுவதுதான்  முற்று - முற்றி - முத்தி - முக்தி.
மோட்சம் என்று ஒன்று இல்லை.
Heaven - என்பது மற்றவருக்கு நன்மை செய்ய, துன்பம் செய்யாமல் இருக்க முன்னோர் காட்டிய நப்பாசையும், அச்சுறுத்தலும் ஆகும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

Energy சத்தி - சக்தி

Energy சத்தி - சக்தி
உடம்பில் சத்து இல்லை.
கீரையில் இரும்புச்சத்து மிகுதி.
இந்தச் 'சத்து'தான் சக்தி.
தமிழில் 'சத்து' என்பதை வடமொழியில் 'சக்தி' என்கின்றனர்.
சத்துப்பொருள் உண்டால் வலிமை பெருகும்.
வலிமையைச் 'சக்தி' என்கிறோம்.
உருவங்கள் கற்பனை.