ஞாயிறு, 21 ஜூன், 2009

மனம் Mind


கைகால்கள் இல்லை
ஊனமாகாது உலகளாவும்
மனம்

இது கவிமுகில் என்பவரின் Haiku கவிதை. மனம் வானளாவப் பறக்கும் என்பார்கள். வானத்தில் நமக்குத் தெரிந்தவை மீன்களும் கோள்களும் போன்றவையே. அவைகளும் தனித்தனி உலகங்கள். மனம் அவற்றையும் அளாவும். அவற்றில் இல்லாதவற்றையும் கற்பனை செய்யும் - இப்படிக் கவிதைச் செய்தி மேலும் விரியும்.

நூல் 'மூவடிச் சித்திரங்கள்' 'Feathered Esloons' பக்கம் 34

ஞாயிறு, 14 ஜூன், 2009

fate? நடப்பது நடந்தே தீரும்


"நடப்பது நடந்தே தீரும்" நம்விதி என்ப தில்லை
அடுத்தவர் சுற்றுச் சூழல் ஆக்கிய தாக்கம் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நம்கையில் ஒன்றும் இல்லை
நடப்பதும் தின்ப தும்யார் நாமன்றி அவனா கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நம்முடை எண்ணம் சொல்லாம்
படிப்பதும் நீதான் கண்ணா பார்ப்பதும் நீதான் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நடத்துவான் "அவன்"தான் என்றால்
துடிப்பது எதற்கோ கண்ணா சும்மாநீ இருக்க லாமே

"நடப்பது நடந்தே தீரும்" நம்பிட மில்லை யாரும்
உடுத்தியே உழைக்கின் றார்கள் ஓயாமல் உண்பார் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நல்லதேன் செய்ய வேண்டும்
அடுத்தவர் நம்மைக் காக்க அறிவதே உண்மை கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நடந்தது தீமை யானால்
இடுக்கிடும் கவலை தீர எண்ணிடும் "சாக்கு" கண்ணா

புதன், 10 ஜூன், 2009

இருவினை (திருக்குறள் 5) -2


கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
பொருளையோ, அருளையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
போற்றுதலையோ தூற்றுதலையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
இவையும் இவை போன்றனவும் இருள்சேர் இருவினைகள்.
ஒளிசேர் வினை இந்த உண்மையை உணர்ந்து செயல்படுவதுதான்.
அதாவது ஒப்புரவோடு வாழ்வதுதான்.

திங்கள், 8 ஜூன், 2009

இருவினை (திருக்குறள் 5) - 1


அண்ட வெளியிலும் அணுக்குள்ளும் இயங்கும் வினைகள் இரண்டு.
இணை - இகல் (எதிர்)
இகலில் இரண்டு வகை
ஒன்று பகையின்றி விலகி மீண்டும் ஒன்று சேர்வது like photon
மற்றொன்று எதிர்க்கும் பகையாக மாறி அழிவது like chemical reaction
இவ்விரண்டும் சேராத தன்மையே இறை என்பது வள்ளுவர் கருத்து
நீர் அணுக்கள் இணைந்தே சொட்டுச் சொட்டாக ஒழுகும்
நீர்த்துளிகள் இணைந்தே ஆற்றில் ஓடும். வாய்க்காலில் பிரியும்.
உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டும் எதிர்த்து அழித்துக்கொண்டும் வாழும்.
இந்த இருவேறு நிலைகளை உணர்ந்துதான் வள்ளுவர் ଧஇருவினைଧ என்றார்.

உலகாயதம் (3) - குலோத்துங்கன்



குலோத்துங்கன் என்பவர் டாக்டர் வா, செ. குழந்தைசாமி
இவரது மரபுக் கவிதைதான் இது

பிறப்பதே ஆதி வாழ்வில்
பேறுகள் பெற்ற பின்னர்
இறப்பதே அந்தம், எல்லை
இரண்டிற்கும் முன்,பின் இல்லை

- நன்றி - இலக்கிய பீடம் - ஜூன் 2009

இறு < இற < இறப்பு < இறுதி
அம் < அமுங்கு =தோன்றியது அமுங்குதல்
அம் < அந்தில் =அவ்விடம் < அந்தம் -தமிழ்
நிலைநீரில் கல்லைப் போட்டால் அலை தோன்றி மறையும்.
காற்று மோதினாலும் அலை தோன்றி மோதி அழியும்.
உடலில் உயிர் இணைந்தால் பிறந்து வாழ்ந்து இறக்கும்.
உயிருக்கு முற்பிறவியோ பிற்பிறவியோ இல்லை.
நீரலைக்கோ காற்றலைக்கோ, முன்பிறவியோ பின்பிறவியோ உண்டா?
அது போலத்தான் நம் பிறவியும்.
(பொதுவன் அடிகள் விளக்கம்)

உலகாயதம் (2) - குலோத்துங்கன்



உடலுடன் ஒன்றி உள்ள
உயிரலால் ஆன்மா இல்லை
கடவுளென்(று) எவரும் இல்லை
காண்பது மட்டும் உண்மை

உலகு ஆயது அம் - அம் ஆற்றல்தான் அமுங்கி உலகு ஆயது
-பொதுவன் அடிகள்

குலோத்துங்கன் என்பவர் Dr. வா. செ. குழந்தைசாமி
- நன்றி - இலக்கிய பீடம் - ஜூன் 2009

உலகாயதம் (1) - குலோத்துங்கன்



உலகாயதம் (உலகு ஆயது அம்)
(அம்=அம்மை=ஆற்றல்=சக்தி களம்)
பார்வையில் தோன்றும் யாவும்
பற்பல வகையில் பூதச்
சேர்க்கையின் விளைவே அன்றித்
தெய்வத்தின் படைப்பொன் றில்லை

-குலோத்துங்கன் என்பவர் Dr. வா. செ. குழந்தைசாமி
-நன்றி இலக்கிய பீடம் -ஜூன் 2009

Fig. 1: In the collision theory of gas-phase chemical reactions, reaction occurs when two molecules collide, but only if the collision is sufficiently vigorous, (a) An insufficiently vigorous collision: the reactant molecules collide but bounce apart unchanged, (b) A sufficiently vigorous collision results in a reaction.

வெளி (புலவர் இரா இராமமூர்த்தி)


படம் - ஐன்ஸ்டீன்

வானத்தில் கிழக்கில்லை மேற்கும் இல்லை
வடக்கில்லை தெற்கில்லை திசையும் இல்லை
தானத்தில் கீழ்இல்லை மேலும் இல்லை
தனியேஓர் முன்இல்லை பின்னும் இல்லை
ஏனையநம் இடம்காலம் என்ப தெல்லாம்
இருபுள்ளிக்(கு) இடையிலுள்ள இயைபே ஆகும்
ஆனதனால் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை
அதைமீறி வளர்ந்ததையா, வானின் எல்லை.

நன்றி
(இலக்கிய பீடம் ஜூன் 2009 இதழில் வெளிவந்துள்ள மரபுக்கவிதை)

வெள்ளி, 5 ஜூன், 2009

பொறிவாயில் ஐந்து அவித்தான் (திருக்குறள்)







மெய், வய், கண், மூக்கு, செவி என்று நமக்கு 5 பொறிகள். 5 புலன்கள். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு வாயில். 5 வாயில்.



இந்த ஐந்தில் எதனாலும் தன்னை அறிய முடியாதவாறு இறைவன் அவித்து வைத்துவிட்டு நமக்குள்ளும் இருக்கிறான். அவனைப் பார்க்க முடியாது. அவன் பேசினால் கேட்க முடியாது. அவன் மணம் நமக்குத் தெரியாது. எனினும் அவன் மூச்சு நமக்குள் ஓடுகிறது. அவனைப் பற்றிப் பேசும் திறமை நமக்கு இல்லை. அவன் இயற்கையாக நம்மேல் உரசுகிறான். உணரமுடியவில்லை.



இதுதான் அவன் நம் பொறிவாயிலை அவித்து வைத்திருக்கும் நிலை.