தெரிந்த பொருளால் தெரியாத ஒன்றை உணரவைப்பது உவமை. உருவத்தையோ, செயலையோ, பண்பையோ உணரவைப்பதற்கு உவமை பயன்படுத்தப்படுகிறது. இறைவனது உருவத்தையோ, செயலையோ, பண்பையோ நம்மால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. பலரும் பலவாறாக அவரவர் மனம் போன போக்கில் கூறிவருகிறோம். எனவே இறைவனுக்கு உவமை இல்லை.