வெள்ளி, 23 ஜனவரி, 2009

வெற்றி - தோல்வி

நினைத்தது நடந்தால் வெற்றி என்றும், நடக்காவிட்டால் தோல்வி என்றும் எண்ணுகிறோம்.
100 நடக்கலாம். 1000 நடக்காமல் போகலாம்.
2 பேர் ஓடும்போது ஒருவருக்கு வெற்றி. மற்றொருவருக்குத் தோல்வி. இது சரி.
10 பேர் ஓடும்போது கடைசியில் ஓடுபவனோடு ஒப்பிடுகையில் 9 பேருக்கு வெற்றியாயும், முதலில் ஓடுபவனோடு ஒப்பிடுகையில் 9 பேருக்குத் தோல்வியாயும் முடிகிறது.
எனவே வெற்றி தோல்வி என்பது தனி மனிதன் கையில் அல்லது திறமையில் இல்லை.
சமூகத்தின் தாக்கத்தில் இருக்கிறது.
100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவில் தங்கப் பதக்கம் பெற்ற ஒருவன் ஒலிம்பிக் போட்டியில் ஓடும் தகுதியையே இழக்க நேரலாம்.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் வெற்றி-தோல்விகளின் உயர்வு-தாழ்வுகள், இன்ப-துன்பங்கள் எத்தகையவை என்பது தெரியவரும்.