ஞாயிறு, 18 ஜனவரி, 2009

இருள்சேர் இருவினை -திருக்குறள் (5)

நமது எண்ணம், மொழி, செயல் எல்லாமே வினை. பசி, தாகம் போன்ற இன்றியமையாத் தேவைகளுக்காக ஒருவன் உழைத்தே ஆகவேண்டும். புகழைத் தேடி மனிதன் செயல்படுகிறான். பிறருக்கு நன்மை செய்கிறான். அதனால் பிறர் நன்மை அடையாமல், எதிர்பாராத வகையில் துன்புற நேர்ந்தால் அதுவே தீவினையாக மாறிவிடுகிறது. எனவே தனக்குப் புகழைத் தேடிச் செய்யும் வினையில் நன்மையும் தீமையும் உண்டு.
தனக்குப் புகழைத் தேடிச் செய்யும் வினை இருள்சேர் இருவினை.
இறைவனின் பொருள் சேர் புகழைப் புரிந்து செய்தல் ஒளி சேர் ஒருவினை.
தன் பசி தாகங்களைப் போக்கிக்கொண்டு ஒளிசேர் ஒருவினை செய்தால் அவனை இருள்சேர் இருவினையும் அவற்றின் பலனும் அவனை வந்தடைவதில்லை. ஒளி =புகழ் (ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை -குறள் 971)