பழமையில் பாடம் படி \ பழமையைப் புதுமையாக்கு \ பைந்தமிழ்ப் பயிர்செய் \ பழந்தமிழ்த் தாய்ப் பேண்
வெள்ளி, 16 ஜனவரி, 2009
ஆதிபகவன் - திருக்குறள் (1) athi pagavan
எனக்கு என் தாய்தந்தையர் ஆதி. எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் அப்படித்தான். ஈரம், இளவெயில், இதமான காற்று -மூன்றும் நிலத்தில் பட்டால் விண் என்னும் உயிர் ஏறிப் பாசி முளைக்கிறது. எனவே பாசிக்கு ஆதி இந்த ஐந்தும். கோள்களுக்கும், விண்மீன்களுக்கும், ஒளிமண்டலங்களுக்கும் ஆதி அண்டம். அண்டப் பொருள்களுக்கும், அதன் அறிவாற்றலுக்கும், இயக்கத்திற்கும் ஆதி அண்டவெளி. அந்த வெளியை நாம் புரிந்துகொள்ள இயலாது. இதுவே ஆதி.
திருவள்ளுவர் அரசனைக் குடிமக்களுக்கு ஆதி என்கிறார். (543). எள்ளுக்குள் இருக்கும் எண்ணெயைப் பகவு என்கிறார் (889).
நமக்கு முதல் போட்டவர் ஆதி. நமக்குள்ளே பங்கு போட்டுக்கொண்டு இருப்பவர் பகவன். எனவே முதலாகவும் பங்காகவும் இருப்பவர் ஆதிபகவன்.
Athi-pagavan
What is this? It denotes the God. Who is God, it defines. He is in and out i.e. within us and without us. He, being without us is called aathi. He being within us is called bahavan / pagavan. He is part and parcel. Universe is the parcel i.e. aathi / aadti. You and I are the parts of the Universe. We are pahavan.
We know water molecule. In such away He is ‘Universe molecule’.