வெள்ளி, 23 ஜனவரி, 2009

தமிழியம்

(தமிழ் இயம்) தமிழை இயம்புவது
இந்தத் தளம் பைந்தமிழ், பழந்தமிழ் என்னும் பார்வையில் தமிழை இயம்புவது
இயம் என்னும் சொல் இசைக்கருவிகளைக் குறிக்கும் வகையில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இயம் < இயம்பு. இயம் < இசை (ய-ச போலி) (ஒப்பு நோக்குக மயல் - மசக்கை)
காவியம் (கா இயம்) = காப்பாற்றும் இயம்புதல்கள்
காப்பியம் (காப்பு இயம்) = காவிய மரபிற்குக் காப்பிட்ட இயம்புதல்கள் (தொல்காப்பியம்)
பாவியம் (பா இயம்) = பா மரபு பற்றிய இயம்புதல்கள், மரபுப் பாவால் இயம்பிய நூல்கள்