எங்கும் எதிலும் எல்லாரிடமும் எல்லாமுமாக இறைந்து கிடப்பவன் இறைவன்.
குடிமக்களின் தலைவனாகிய அரசனையும் இறைவன் என்கிறார் திருவள்ளுவர்.
இந்தப் பார்வையில் எங்கும் எதிலும் எல்லாரிடமும் எல்லாமுமாக இறைந்து கிடக்கும் இறைவன் இவற்றினின்று வேறுபட்டு இவற்றை ஆளும் தலைவனாகவும் விளங்குகிறான்.
நம் செயல் நமக்கு விளைவைத் தரும். ஆனால் அவன் செயல் அவனுக்கு எந்த விளைவையும் தராது. அவன் நமக்குள் இருக்கும்போதும் நமது இன்ப துன்ப இருவினை அவனைச் சேர்வதில்லை.