ஞாயிறு, 18 ஜனவரி, 2009

நீத்தார்

திருக்குறளின் 3ஆவது அதிகாரம் நீத்தார் பெருமை. நீத்தார் யார்? வள்ளுவர் விளக்குகிறார். துறந்தார், செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர், ஒழுக்கத்து நீத்தார், ஐந்தவித்தான், ஐந்தும் காப்பான், ஐந்தின் வகை தெரிவான், அறம் பூண்டார், நிறைமொழி மாந்தர், செயற்கரிய செய்வார், குணம் என்னும் குன்று ஏறிநின்றார், - என்னும் திருக்குறள் தொடர்கள் நீத்தார் எப்படிப்பட்டவர் என்பதை விளக்குகின்றன.
இந்தப் பத்தில் ஐந்தவித்தான் என்னும் தொடர் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுண்ணாம்புக் கல் மற்றக் கற்களைப் போல நிலத்தில் கிடக்கும். காளவாயிலில் வைத்துச் சுட்டபின் காரம் ஏறிவிடும். அதில் தண்ணீர் பட்டால் நீத்துப் போய்விடும். நீத்த சுண்ணாம்பு தன் பழைய நிலைக்குத் திரும்புவதில்லை.
இப்படித்தான் நீத்தாரின் புலன்கள் இருக்கும்.
மாட்டுச் சாணம் > விராட்டி > தீமூட்டம் > திருநீறு > நெற்றிநில் அணிகிறோம்.
இந்த நீறு போன்றவர் நீத்தார் < நீற்றார்.