பழமையில் பாடம் படி \ பழமையைப் புதுமையாக்கு \ பைந்தமிழ்ப் பயிர்செய் \ பழந்தமிழ்த் தாய்ப் பேண்
புதன், 28 ஜனவரி, 2009
நெடுநல்வாடை (செய்தி ஓட்டச் சுருக்கம்
அகத்திணை \தலைவன் பிரிவைத் தலைவி ஆற்றிக்கொண்டு இருக்கும் உரிப்பொருளைப் பார்க்கும்போது முல்லைத் திணை \தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் நிலையை உரிப்பொருளாகக் கொண்டால் பாலைத்திணை \பாசறையில் இருக்கும் அரசனின் மெய்க்காப்பாளனது வேலில் வேப்பந்தழை கட்டப்பட்டிருந்ததைக் கூறுவதால் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டு புறத்திணை என்பர்.
செவ்வாய், 27 ஜனவரி, 2009
திருமுருகாற்றுப்படை (செய்தி ஓட்டச் சுருக்கம்)
முதுவாய் இரவல!(ன்)(அடி 284) செவ்வேள் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு ( 61)
செலவு நீ நயந்தனை ஆயின் (64)
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே (66)
கூடல் குடவயின் (71) குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று, (77)
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதாஅன்று (125),
ஏரகத்து உறைதலும் உரியன், அதாஅன்று (188),
ஆவினன்குடி அசைதலும் உரியன். அதாஅன்று (176),
தோள் பல் பிணை தழீஇ குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே, அதாஅன்று (217)
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியன் நகர் (244)ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே (249)
இழும் என இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலை கிழவோனே (317)
அதாஅன்று = அதுவுமல்லாமல்
1 திருப்பரங்குன்றம், 2 திருச்சீர் அலைவாய், 3 திரு ஏரகம், 4 திரு ஆவினன்குடி, 5 குன்றிருக்கும் இடமெல்லாம் தோள்பிணை தழுவி துணங்கை ஆடல், 6 முருகனுக்கு விழாக் கொண்டாடும் இடமெல்லாம் உறைவான். (அவன் யார்?) பழமுதிர் சோலை மலைகிழவோன்
வலன் ஏர்பு திரிதரு ... ஞாயிறு கடல் கண்டு ஆங்கு (1),மனன் ஏர்பு திரிதரு வால் நிற முகனே (90)
வலனேர்பு (வலன் ஏர்பு, வலன் நேர்பு) திரிதரு ஞாயிறு (1)
மனனேர்பு (மனன் ஏர்பு, மனன் நேர்பு) எழுதரு (ஆறு)முகன் (90)
ஞாயிறு வானில் திரிவது போல, முருகன் மனத்தில் எழுகிறான்.
திங்கள், 26 ஜனவரி, 2009
முதல் (திருக்குறள் 1)
அ -எழுத்து எழுத்துக்களின் முதல். அது போல ஆதிபகவன் உலகுக்கு முதல்.
தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து 30. உயிர் எழுத்து 12. மெய் எழுத்து 18. ஆக 30.
சொல்லமைதியில் சார்பெழுத்துக்கள் தோன்றும்.
முதலெழுத்து 30-ல் முதலாவதாக வருவது அ.
ஆதி = capital
A to Z(26) are the capital letters of the small letters (a to z)
As 'A' is the capital of the following all letters, 'He' is the capital of 'organism and isoganism'. 'organism with isoganism'.
ஆதி = organism, the totality of the universe
பகவன் = isoganism, the particles and movements of an atom
முதல் போட்டு வணிகம் செய் (முதல் =மூலதனம்)
முதலமைச்சர் (முதல் =தலைமை) (முதலெழுத்து =தலையெழுத்து) (அவன் நம் தலையெழுத்து)
முதலில் வருபவன் யார்? (முதல் =இடத்தில் முதன்மை)
முதல் மதிப்பெண் (முதல் =உயர்வு)
முதல் மனிதன் (முதல் =ஆதி)
விளைச்சலுக்கு முதல் விதை (முதல் =மூலம்)
கந்தன், கடம்பன் முதலானவை முருகனின் பெயர்கள் (முதல் =முதலோடு வருபவை)
இப்படியெல்லாம் முதல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அ -எழுத்து உயிரெழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் முதலாய் இருப்பது போல, ஆதிபகவன் உலகுக்கு முதலாக இருக்கிறான். நம் உயிருக்கும் உடலுக்கும் முதல் அவன். உயிரும் உடலும் இணைந்து செய்யும் வினைக்கும் முதல் அவன். நமது ஐம்புல உணர்வைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளும் மனமும் அவன். அப் பதிவை விரித்துக் காட்டும் அறிவும் அவன். அறிவை உரசிப் பார்க்கும் கற்பனையும் அவன். மற்றும் ஒருவனுக்குள்ள குணமும் அவன். ஒவ்வொருவரும் தேடும் புகழும் அவன். இவற்றின் விரிவை அடுக்கிக் காட்டுவனவே முதல் 10 குறள்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

ஞாயிறு, 25 ஜனவரி, 2009
தூ, துப்பு (திருக்குறளில்)
(நுகர், அனுபவி)
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவா வரும் (திருக்குறள் 455) (தூ =வலிமை)
தான் தூவான் 1006
துவ்வாமை 94
துவ்வாதவர் 42
துப்புக் கெட்டவன் = வலிமை இல்லாதவன்
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு (திருக்குறள் 106)(=துணை, பற்றுக்கோடு)
ஏதிலான் துப்பு (திருக்குறள் 862)
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை (திருக்குறள் 1050) (= மன வலிமையில் திட்பம் இல்லாதவர்)
துறப்பார்மன் துப்புரவு இல்லார் (திருக்குறள் 378) (= மன வலிமையில் திட்பம் இல்லாதவர்)
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம் (திருக்குறள் 265)(துணை)
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை (திருக்குறள் 12) (உணவு, உண், பற்றுக்கோடு)
துப்பின் எவன் ஆவர்? மற்கொல் துயர் வரவு நட்பினுள் ஆற்றுபவர்(திருக்குறள் 1165)
விளக்கம் வரும்

காவடி (திருக்குறளில்)
காவடி = கா அடி (காப்பாற்றிய, காப்பாற்றுகின்ற, காப்பாற்றும் திருவடி)
காவடித் தண்டின் இரண்டு முனைகளிலும் பாரம். தோள் இருமுனைப் பாரங்களையும் சமமாக்கிக் கொண்டு சுமக்கும்.
காமம் (=காதல் உணர்வு) இணையும் இருபாலாரிடையேயும் சமமாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் உறவுச் சேர்க்கை இனிக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் காதல் உணர்வு காவடித் தண்டின் இருமுனைச் சுமை போலச் சீராக்கப்பட வேண்டும். ஒருவரிடம் அதிகமாகவும், மற்றொருவரிடம் மாறுபட்டும் இருந்தால் காமம் துன்பத்தையே தரும். ஒருதலையான் இன்னாது காமம் காப் போல
இருதலையும் ஏமாப்(பு) உடைத்து. (திருக்குறள் 1196)
அவள் சொல்கிறாள். என் உயிர் ஒரு காவடி. அந்தக் காவடியில் உள்ள ஒரு பக்கப் பாரம் காமம். இன்னொரு பக்கப் பாரம் அதனை அடையவிடாமல் தடுக்கும் நாணம். இந்த இரண்டையும் சீர் செய்துகொண்டு சுமக்க என் உடம்புக்குத் தெரியவில்லை. எனவே என் உடம்பு தன் உயிரை விட்டுவிடும் போல் இருக்கிறது. என் செய்வேன்!
காமமும் நாணும் உயிர்க்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. (திருக்குறள் 1163)
சனி, 24 ஜனவரி, 2009
இன்பம் - புலனின்பம், புகழின்பம்
நமக்கு உடலும் உயிரும் உண்டு. இரண்டும் செம்மையாக இயங்கும்போது உணர்வு இருக்கும். உணர்வு பொங்குவதை உணர்ச்சி என்கிறோம். சூழல் ஐம்புலனில் மோதும். மோதும் சூழலைப் பொறிகள் (orgones) உணர்வது புலன் (sense). புலன் மனத்தில் பதியும். நாம் அந்தப் பதிவுகளைத் தட்டி எழுப்புவதை எண்ணம் (thought) என்கிறோம். எண்ணம் மலரும். மலர்ந்தவை ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதை அறிவு (knowledge) என்கிறோம்.
புலன்களில் பதிவது உடலின்பம். பாலின்பம், பாட்டுக் கேட்டல், பழம் சுவைத்தல் போன்றவை உடலின்பம்.
அறிவின்பம் புகழால் வரும். செயலில் வெற்றி பெறும்போது புகழ் வருகிறது. கொடையால் புகழ் வருகிறது. இது உயிர் பெறும் உன்பம்.
உடலைச் சுட்டெரித்த பின்னரும் புகழ் அந்த உயிரைத் தாக்கும். காந்தியை நாம் புகழ்வது போன்றது அது. ஆனால் உடலைப் பிரிந்த உயிர் அந்தப் புகழ்ச்சியை உணரப் போவதில்லை.
புகழ்பவருக்குப் புகழ் வரலாம். அதுவும் கேட்போரைப் பொருத்தே இருக்கும்.
புலனின்பம், புகழின்பம் இரண்டையும் நாம் தேடுகிறோம். எதையும் ஒதுக்குவது இல்லை.

வெள்ளி, 23 ஜனவரி, 2009
வெற்றி - தோல்வி
நினைத்தது நடந்தால் வெற்றி என்றும், நடக்காவிட்டால் தோல்வி என்றும் எண்ணுகிறோம்.
100 நடக்கலாம். 1000 நடக்காமல் போகலாம்.
2 பேர் ஓடும்போது ஒருவருக்கு வெற்றி. மற்றொருவருக்குத் தோல்வி. இது சரி.
10 பேர் ஓடும்போது கடைசியில் ஓடுபவனோடு ஒப்பிடுகையில் 9 பேருக்கு வெற்றியாயும், முதலில் ஓடுபவனோடு ஒப்பிடுகையில் 9 பேருக்குத் தோல்வியாயும் முடிகிறது.
எனவே வெற்றி தோல்வி என்பது தனி மனிதன் கையில் அல்லது திறமையில் இல்லை.
சமூகத்தின் தாக்கத்தில் இருக்கிறது.
100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவில் தங்கப் பதக்கம் பெற்ற ஒருவன் ஒலிம்பிக் போட்டியில் ஓடும் தகுதியையே இழக்க நேரலாம்.
இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் வெற்றி-தோல்விகளின் உயர்வு-தாழ்வுகள், இன்ப-துன்பங்கள் எத்தகையவை என்பது தெரியவரும்.

முற்பிறவி
உயிரின் முற்பிறவியா? உடம்பின் முற்பிறவியா?
உடம்பின் முற்பிறவி பெற்றோர்.
உயிரின் முற்பிறவி ஆருக்குத் தெரியும்?
உயிரே தெரியவில்லை. உயிரின் வினை அடுத்த பிறவிக்குத் தொடரும் என்கின்றனர்.
வினை தொடரும் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.
நல்லது செய்ய வேண்டும். அதனால் எல்லாரும் இன்புற வேண்டும் -என்கிற நல்லெண்ணத்தில் கூறப்படும் தத்துவங்கள் பலவற்றுள் இதுவும் ஒன்று.
தத்துவம் தத்துப் பிள்ளை. உண்மை சொந்தப் பிள்ளை. முற்பிறவிக் கொள்கை தத்துப் பிள்ளை.

கடவுள் 2
கடவுளைப் பார்க்கலாம்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்க்கிறோம். காதுக்கு எட்டிய தூரம் வரை கேட்கிறோம். மூக்குக்கு எட்டிய தூரம் வரை முகர்கிறோம். வாயில் பட்டால் சுவைக்கிறோம். மெய்யில் படும் குளிர் சூடு போன்றவற்றையும் உணர்கிறோம். இப்படி மனத்தில் பட்டதைக் கற்பனைக்கு எட்டிய தூரம் வரை கடவுளைக் காணலாம்.
நமது முதுகைக் கண்ணாடியில் பார்த்தாலும், நாம் உண்ணும் உணவு நமக்குச் சத்தாக மாறுவதைப் பார்க்க முடியவில்லை. இதனைச் செய்யும் உயிர் எந்திரமாகிய கடவுளை நம்மால் பார்க்க இயலாது.

தமிழியம்
(தமிழ் இயம்) தமிழை இயம்புவது
இந்தத் தளம் பைந்தமிழ், பழந்தமிழ் என்னும் பார்வையில் தமிழை இயம்புவது
இயம் என்னும் சொல் இசைக்கருவிகளைக் குறிக்கும் வகையில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இயம் < இயம்பு. இயம் < இசை (ய-ச போலி) (ஒப்பு நோக்குக மயல் - மசக்கை)
காவியம் (கா இயம்) = காப்பாற்றும் இயம்புதல்கள்
காப்பியம் (காப்பு இயம்) = காவிய மரபிற்குக் காப்பிட்ட இயம்புதல்கள் (தொல்காப்பியம்)
பாவியம் (பா இயம்) = பா மரபு பற்றிய இயம்புதல்கள், மரபுப் பாவால் இயம்பிய நூல்கள்

கடவுள் 1
கடவுள் எங்கோ இருக்கிறார் என்றும் நமக்குள் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இல்லை என்பாருக்கு ஒரு வினா. நீ யார்? கடவுளின் ஒரு கூறுதானே!
மழை நம் கட்டுப்பாட்டில் இல்லை.இது நம்மைக் கடந்து உள்ள கடவுள்.
மனம் நம் கட்டுப்பாட்டில் இல்லை. என்றாலும் மடைமாற்றம் செய்யலாம்.இது நமக்குள் உள்ள கடவுள். கடவாக உள்ள கடவுள். கடவு என்னும் சொல்லுக்குத் தமிழில் வழி என்று பொருள். இப்படி நாமாக, நமக்குள் வழியாக, நம்மை ஆட்டிப் படைக்கும் மழை போன்றவைகளாக உள்ள கடவுளை இல்லை என்பது விந்தை.

செவ்வாய், 20 ஜனவரி, 2009
நமச்சிவாய
நமச்சிவாய(ம்) நமச்சிவாய ...............
நம் அச்சு இவ் ஆயம்
அச்சு < அச்சன் = நம் வாழ்க்கைச் சக்கரம் உருள அச்சாக விளங்குபவன்.
ஆயம் = தோழமைத் தொகுதி, திருக்கூட்டத் தொகுதி, பேராயம்
ஆ = பசு (பதி, பசு, பாசம்) (பசு = உயிரினம்)
ஆயம் = உயிரினத் தொகுதி
நம் அச்சு இவ் ஆயம்
அச்சு < அச்சன் = நம் வாழ்க்கைச் சக்கரம் உருள அச்சாக விளங்குபவன்.
ஆயம் = தோழமைத் தொகுதி, திருக்கூட்டத் தொகுதி, பேராயம்
ஆ = பசு (பதி, பசு, பாசம்) (பசு = உயிரினம்)
ஆயம் = உயிரினத் தொகுதி
நமசிவாய
நமசிவாய - சிவாய(ம்)நம
சிவ் < சிவன் < சிவம் ஆயம் = சிவாயம்
நம = நம்முடையவை
என் கை என்றால் என் கைகளில் ஒன்று.
என கை என்றால் என் இரண்டு கைகளும்
செய்தன (செய் த் அன் அ) என்பதில் அ பன்மையை உணர்த்துகிறது.
(ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும், பன்மைக்கு அவ்வும் உருபு ஆம் - நன்னூல் 299)
(உய்த்துச் சொரியினும் போகா தம - திருக்குறள் 376)
(தம போகா = தம்முடையவை போகமாட்டா)
எம = எம்முடையவை
நும = உம்முடையவை
நம = நம்முடையவை
சிவ ஆயம் நம்முடையவை.
(சிவம் - காண்க)

ஓம்
செய்வோம் (செய் வ் ஓம்) என்னும்போது வரும் ஓம் என்பதுதான் ஓம் மந்திரம்.
நீயும், நானும், அவனும் செய்வோம்.
கூடிச் செய்வதை உணர்த்துவது ஓம்.
அவன் அண்டத் தொகுதியோடு கூடி இருந்துகொண்டு செய்யும் செயலும், இயங்கும் இயல்பும் ஓம்.
தமிழியல் தரும் விளக்கம் இது.
ஓம் என்னும் மந்திரத்தின் பொருளைச் சொல்லவில்லை என்பதற்காக முருகன் பிரமனைச் சிறையில் அடைத்தான் என்பது பழங்கதை.

திங்கள், 19 ஜனவரி, 2009
சங்க காலச் செய்திகள்
இந்தத் தளத்தில் சங்க காலச் செய்திகளாகச் சொல்லப்படுபவை (பாடல் குறிப்புகளுடன்)
சேரர்
சோழர்
பாண்டியர்
குறுநில மன்னர்கள் முதலானோர்
ஊர் முதலான இடங்களும் நிகழ்வுகளும்
ஒப்பு நோக்கக் குறிப்புகள்
-விரியும்-
சேரர்
சோழர்
பாண்டியர்
குறுநில மன்னர்கள் முதலானோர்
ஊர் முதலான இடங்களும் நிகழ்வுகளும்
ஒப்பு நோக்கக் குறிப்புகள்
-விரியும்-
தமிழியல் 4
பொருளில் அடையும் வேறுபாட்டை வேற்றுமை என்கிறோம்.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு வேற்றுமை 7 என்றனர்.
தொல்காப்பியர் விளி வேற்றுமையைச் சேர்த்து 8 என்றார்.
1 பொருளின் இருப்பு அல்லது இயங்கு நிலை
2 பொருள் பயன்படு நிலை
3 பொருளோடு பொருள் இணைதல் (1-ஓடு தொடர்புடையது), பொருளைப் பயன்படுத்துதல் (2-ஓடு தொடர்புடையது) ஆகிய 2 நிலைகள்
4 பொருளுக்குக் கொடுக்கும் நிலை
5 பொருளிலிருந்து விலகும் நிலை
6 பொருள் பெற்றிருக்கும் தன்மை
7 பொருள் இருக்கும் இடம்
8 பொருளை அழைத்தல்
---
எடுத்துக்காட்டுகள்
1 பழம் இனிக்கும். -பழம் விழுந்தது. -பழம் நன்று
2 பழத்தைச் சாப்பிடு.
3 பழத்தொடு பால் சேர். -பழத்துடன் பாலும் வந்தது. பழத்தால் என்ன செய்யலாம்?
4 பழத்துக்குப் பாதுகாப்பு உண்டா? -பழத்துக்குப் பக்கத்தில் -பழத்துக்கு நிகர் உண்டா?
5 பழத்திலுருந்து சாறு பிழி. விதையிலிருந்து செடி முளைக்கும்.
6 பழத்தினது தோல். -பழத்தினுடைய சுவை
7 பழத்தின்மேல் ஈ -பழத்துக்குள் கொட்டை
8 பழமே!

தமிழியல் 3
பெயரோடு வேற்றுமை இணையும்
வினையோடு காலம் இணையும்
இணைவதற்குத் துணையாக இடைச்சொல் வரும்
ஒரு சொல் பல பொருள் தருவதாகக் கொள்வதையும், பல சொல் ஒரு பொருள் தருவதாக் கொள்வதையும் உரிச்சொல் என்கிறோம்
different meanings and synonyms
---
பெயர், வினை, இடை, உரி -ஆகிய சொற்களை இவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்.
---
தொடர்வோம்

தமிழியல் 2
பைந்தமிழுக்கும் பழந்தமிழுக்கும் பொது
---
மலர் -கண்ணில் தோன்றும் பொருள்
மதிப்பு -கருத்தில் தோன்றும் பொருள்
இரண்டும் நாம் வைத்துக்கொண்ட பெயர்
---
மலர் பூத்தது
மதிப்பு வந்தது
இரண்டும் பொருளில் நேர்ந்த செயல்.
இதனை வினை என்கிறோம்.
---
இப்படிச் சொல்லானது பெயர், வினை என்று 2 வகைப்படும்

தமிழியல் 1
தமிழ் மொழியின் இயல்பைத் தமிழியல் என்கிறோம்.
கருத்தைப் புலப்படுத்த மொழியில் சொற்கள் இணைகின்றன.
சொற்கள் இயல்பாக எந்த மாற்றமும் இல்லாமல் இணைவதும் உண்டு. மாற்றங்களோடு இணைவதும் உண்டு.
மாற்றம் முதலில் நிற்கும் சொல்லிலோ, அதனுடன் இணையவரும் சொல்லிலோ, இரண்டிலுமோ நிகழும்.இரண்டிற்கும் இடையில் சார்பொலி சேர்வதும் உண்டு.
---
பழந்தமிழ்
பால் கற -இயல்பு
பாற்சோறு -(பால் சோறு) முதல் சொல்லில் திரிபு (நிலைமொழியில் திரிபு)
கண்ணோட்டம் (கண் ஓட்டம்) (கண் நோட்டம்) -வருமொழியில் திரிபு
சொற்றொகுதி (சொல் தொகுதி)
---
விரிவு வேறு பகுதியில்

பாயிரம் (திருக்குறள்)
இறை, மழை, நீத்தார், அறம் என்னும் நான்கினைக் கூறுவது திருக்குறள் பாயிரம். இவற்றைத் -தெரியாமல் ஆட்டிப் படைக்கும் இறை, -தெரிந்து ஆட்டிப் படைக்கும் மழை, -வாழ்ந்து காட்டும் நீத்தார், -வாழவேண்டிய அறநெறி என்று பாகுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாயிரம் என்னும் சொல் சங்க நூல்களில் இல்லை.பழமொழி, பெருங்கதை ஆகிய நூல்களில் காணப்படுபவையே காலத்தால் முந்தியவை. தொல்காப்பியத்தில் பனம்பாரனார் பாடலைப் பாயிரம் என்கிறோம். திருக்குறள் தொகுப்பைப் பிரித்துக் காட்டும் திருவள்ளுவ மாலை முதல் 4 அதிகாரங்களைப் பாயிரம் என்று குறிப்பிடுகிறது.நன்னூல் இலக்கணத்தில் பாயிரம் விரிவாகப் பேசப்படுகிறது. நூலின் தொகுப்பு முன்னுரையைப் பாயிரம் என்கிறோம்.

அறம்
வள்ளுவர் அறச்செயல் என்று பலவற்றைக் குறிப்பிடுகிறார்.இன்சொல் (96)பொய்யாமை (297)போன்றவை பல இருப்பினும் அவை நல்லெண்ணம் நற்செயல் என்னும் இரண்டனுள் அடங்கும். இவற்றை வள்ளுவர் மனத்துக்கண் மாசிலன் ஆதல் (34)என்றும், நன்று ஆற்றல் (38) என்றும் குறிப்பிடுகிறார்.
ஞாயிறு, 18 ஜனவரி, 2009
நீத்தார்
திருக்குறளின் 3ஆவது அதிகாரம் நீத்தார் பெருமை. நீத்தார் யார்? வள்ளுவர் விளக்குகிறார். துறந்தார், செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர், ஒழுக்கத்து நீத்தார், ஐந்தவித்தான், ஐந்தும் காப்பான், ஐந்தின் வகை தெரிவான், அறம் பூண்டார், நிறைமொழி மாந்தர், செயற்கரிய செய்வார், குணம் என்னும் குன்று ஏறிநின்றார், - என்னும் திருக்குறள் தொடர்கள் நீத்தார் எப்படிப்பட்டவர் என்பதை விளக்குகின்றன.
இந்தப் பத்தில் ஐந்தவித்தான் என்னும் தொடர் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுண்ணாம்புக் கல் மற்றக் கற்களைப் போல நிலத்தில் கிடக்கும். காளவாயிலில் வைத்துச் சுட்டபின் காரம் ஏறிவிடும். அதில் தண்ணீர் பட்டால் நீத்துப் போய்விடும். நீத்த சுண்ணாம்பு தன் பழைய நிலைக்குத் திரும்புவதில்லை.
இப்படித்தான் நீத்தாரின் புலன்கள் இருக்கும்.
மாட்டுச் சாணம் > விராட்டி > தீமூட்டம் > திருநீறு > நெற்றிநில் அணிகிறோம்.
இந்த நீறு போன்றவர் நீத்தார் < நீற்றார்.

133 பத்து -எண்ணிக்கை
திருக்குறளில் 133 அதிகாரக்கள். 1330 குறள்கள். இந்த எண்ணிக்கைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு? தமிழில் மொத்தமுள்ள நெடில் எழுத்துக்கள் 133. எனவே திருக்குறள் 133 பத்துக்களால் அமைக்கப்பட்டுள்ளது என்கிறார் முனைவர். மு. இளங்கண்ணன். (நூல் திருக்குறளின் வடிவமைப்பும் திட்டமும் செயல்திறனும் - பதிப்பு 2002. பக்கம் 33)
உயிரெழுத்து நெடில் 7. உயிர்மெய் எழுத்து நெடில் 18 பெருக்கல் 7 =126.
7ஐயும் 126ஐயும் கூட்டினால் 133.
இது ஆய்ந்து தோய்ந்த விளக்கம். அரிய உண்மை.
உயிரெழுத்து நெடில் 7. உயிர்மெய் எழுத்து நெடில் 18 பெருக்கல் 7 =126.
7ஐயும் 126ஐயும் கூட்டினால் 133.
இது ஆய்ந்து தோய்ந்த விளக்கம். அரிய உண்மை.
எண்குணம்
பிறவிப் பெருங்கடல் -திருக்குறள் (10)
பிறந்தோம். இறப்போம். இடைக் காலத்தில் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையை வள்ளுவர் பிறவி என்கிறார். பல பிறவிகள் உண்டு என்று நம்புவார்க்கு அவை கடலாக இருந்துவிட்டுப் போகட்டும்.
இறைவனது திருவடிகளை நாம் சுமந்தால் அவர் நம்மைத் தாங்கிக்கொள்வார்.
வாழ்க்கை ஒரு கடல். அதில் செல்வதற்கு ஒரு மிதவை வேண்டும். அந்த மிதவை இறைவனடி. கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டுக் கடமையைச் செய்தால் வாழ்வு எளிதாகும் என்பது அறிவியல் கண்ணோட்டக் கருத்து. மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கைக் கருத்து.

இருள்சேர் இருவினை -திருக்குறள் (5)
நமது எண்ணம், மொழி, செயல் எல்லாமே வினை. பசி, தாகம் போன்ற இன்றியமையாத் தேவைகளுக்காக ஒருவன் உழைத்தே ஆகவேண்டும். புகழைத் தேடி மனிதன் செயல்படுகிறான். பிறருக்கு நன்மை செய்கிறான். அதனால் பிறர் நன்மை அடையாமல், எதிர்பாராத வகையில் துன்புற நேர்ந்தால் அதுவே தீவினையாக மாறிவிடுகிறது. எனவே தனக்குப் புகழைத் தேடிச் செய்யும் வினையில் நன்மையும் தீமையும் உண்டு.
தனக்குப் புகழைத் தேடிச் செய்யும் வினை இருள்சேர் இருவினை.
இறைவனின் பொருள் சேர் புகழைப் புரிந்து செய்தல் ஒளி சேர் ஒருவினை.
தன் பசி தாகங்களைப் போக்கிக்கொண்டு ஒளிசேர் ஒருவினை செய்தால் அவனை இருள்சேர் இருவினையும் அவற்றின் பலனும் அவனை வந்தடைவதில்லை. ஒளி =புகழ் (ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை -குறள் 971)

சனி, 17 ஜனவரி, 2009
எண்குணத்தான் -திருக்குறள் (9)
ஆதிபகவன் \வாலறிவன் \மலர்மிசை ஏகினான் \வேண்டுதல் வேண்டாமை இலான் \இறைவன் \பொறிவாயில் ஐந்து அவித்தான் \தனக்கு உவமை இல்லாதான் \அறவாழி அந்தணன் ஆகிய எட்டும் இறைவனின் எட்டு குணங்கள். இவற்றை முறையே -உயிருடல் \அறிவு \எண்ணம் \ஆசை \அரவணைக்கும் தலைமை \மனத்தாலும் புரிந்துகொள்ள முடியாத தன்மை \ஒப்புமை காட்டிப் பரிய வைக்க முடியாத தன்மை \அறத்தைச் சுழற்றி ஆள்தல் -என்னும் எட்டு குணங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை எட்டு குணங்கள் என்றோ, எண்ணிப் பார்க்கத் தக்க குணங்கள் என்றோ, இயல்பாகப் பாயும் எளிய குணங்கள் என்றோ நாம் எடுத்துக்கொள்ளலாம்.
ଧ எண் சேர்ந்த நெஞ்சு ଧ - குறள் ௯௧0
ଧ எண் பதத்தால் எய்துதல் ଧ குறள் ௯௯௧
ஆகியவற்றை ଧஎண்ଧ என்பதற்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.
ଧ எண் சேர்ந்த நெஞ்சு ଧ - குறள் ௯௧0
ଧ எண் பதத்தால் எய்துதல் ଧ குறள் ௯௯௧
ஆகியவற்றை ଧஎண்ଧ என்பதற்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.
அறவாழி அந்தணன் -திருக்குறள் (8)
ஆற்று நீரை அறுத்து வயலுக்குப் பாய்ச்சுவது போல் இயல்பாக ஓடும் உணர்வுகளை நல்லவை விளையப் பாய்ச்சுவது அறம்.
ஆழி =வண்டிச்சக்கரம் =நிலப் பரப்பைச் சுற்றி உருளும் கடல்.
அறத்தை உருளச் செய்பவன் அந்தணன்.
(அந்தணர் என்போர் அறவோர் - குறள் 30)
அரசு =ஆளும் தொகுதி
பொதுக்கூட்டம் ஒன்றில் அவைத் தலைவனும் பேச்சாளனும் கூட்டத்தை ஆள்வது போன்று நாட்டை அரசு ஆள்கிறது. அரசனும் ஓர் இறைவன். அரசின் ஆட்சிக்குக் கட்டுப்படாமல் வாழ்பவர்களும் நாட்டில் உண்டு. கடவுளாகிய இறைவன் ஆட்சியில் இந்த நிலை இல்லை. இவன் அறச் சக்கரத்தை உருட்டும் அந்தணன்.

பொறிவாயில் ஐந்து அவித்தான் -திருக்குறள் (6)
கண், காது, வாய், மூக்கு, மெய் ஆகிய ஐந்தும் பொறிகள், காணல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், தொடுஉணர்வு ஆகிய ஐந்தும் அப் பொறிகளின் வாயில்கள். இறைவன் தன்னைக் காணமுடியாதபடி நம்மிடமுள்ள இந்த ஐந்து வாயில்களையும் அவித்து வைத்துள்ளான்.
அவித்த பயறு முளைக்காது. அதுபோல, புலன்களால் இறைவனை உணர முடியாது.
புலன்களின் பதிவு மனம். மனம் தன் பதிவுகளைக் கொண்டு பதியாத ஒன்றைக் கற்பனை செய்யும். அப்படிக் கற்பனை செய்யப்பட்டதுதான் இன்று உலகம் வணங்கும் கடவுள். அவன் நம் அறிவையும், அது பதிந்துள்ள மனத்தையும் கடந்தவன். அவற்றின் உயிராக இருந்துகொண்டு வழிநடத்துபவன். (கடவு =வழி)

தனக்கு உவமை இல்லாதான் -திருக்குறள் (7)
தெரிந்த பொருளால் தெரியாத ஒன்றை உணரவைப்பது உவமை. உருவத்தையோ, செயலையோ, பண்பையோ உணரவைப்பதற்கு உவமை பயன்படுத்தப்படுகிறது. இறைவனது உருவத்தையோ, செயலையோ, பண்பையோ நம்மால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. பலரும் பலவாறாக அவரவர் மனம் போன போக்கில் கூறிவருகிறோம். எனவே இறைவனுக்கு உவமை இல்லை.
வெள்ளி, 16 ஜனவரி, 2009
இறைவன் -திருக்குறள் ( 5,10)
எங்கும் எதிலும் எல்லாரிடமும் எல்லாமுமாக இறைந்து கிடப்பவன் இறைவன்.
குடிமக்களின் தலைவனாகிய அரசனையும் இறைவன் என்கிறார் திருவள்ளுவர்.
இந்தப் பார்வையில் எங்கும் எதிலும் எல்லாரிடமும் எல்லாமுமாக இறைந்து கிடக்கும் இறைவன் இவற்றினின்று வேறுபட்டு இவற்றை ஆளும் தலைவனாகவும் விளங்குகிறான்.
நம் செயல் நமக்கு விளைவைத் தரும். ஆனால் அவன் செயல் அவனுக்கு எந்த விளைவையும் தராது. அவன் நமக்குள் இருக்கும்போதும் நமது இன்ப துன்ப இருவினை அவனைச் சேர்வதில்லை.

வேண்டுதல் வேண்டாமை இலான் -திருக்குறள் (4)
மலர்மிசை ஏகினான் -திருக்குறள் (3)
செடியில் பூ மலர்கிறது. அதுபோல நமக்குள் அறிவு எண்ணமாக மலர்கிறது. அறிவன் எண்ணமாக நடக்கிறான். எண்ணத்தில் நடப்பவன் இறைவன்.
------------------------------------------------------------
------------------------------------------------------------
வாலறிவன் - திருக்குறள் ( 2)
ஆதிபகவனின் அறிவு வாலறிவு. நம் அறிவு சிற்றறிவு.
வால் =வலிமை (வாலிபன், வாலைக் குமரி, )
வால் =வாலுத்தனம் (மழையும், வெயிலும், புயலும், மண்ணும், விண்ணாகிய உயிரும் நம்மிடம் வாலுத்தனம் செய்மின்றன. இதுவும் வாலறிவு)
வால் =வெண்மை (வால் வளை =வெண்சங்கு -புறநானூறு 158)
(வால் வெள் அருவி =வெண்மையாகத் தோன்றும் தூய அருவி -அகநானூறு 308)
வால் =தூய்மை (வாலாமை நாள் =மகளிர் தூய்மை இல்லாத மாதவிடாய் நாள் -சிலப்பதிகாரம் 15-24)
இப்படியும் எப்படியும் இருப்பதுதான், இயங்குவதுதான் வாலறிவு
------------------------------------------------------------
வால் =வலிமை (வாலிபன், வாலைக் குமரி, )
வால் =வாலுத்தனம் (மழையும், வெயிலும், புயலும், மண்ணும், விண்ணாகிய உயிரும் நம்மிடம் வாலுத்தனம் செய்மின்றன. இதுவும் வாலறிவு)
வால் =வெண்மை (வால் வளை =வெண்சங்கு -புறநானூறு 158)
(வால் வெள் அருவி =வெண்மையாகத் தோன்றும் தூய அருவி -அகநானூறு 308)
வால் =தூய்மை (வாலாமை நாள் =மகளிர் தூய்மை இல்லாத மாதவிடாய் நாள் -சிலப்பதிகாரம் 15-24)
இப்படியும் எப்படியும் இருப்பதுதான், இயங்குவதுதான் வாலறிவு
------------------------------------------------------------
ஆதிபகவன் - திருக்குறள் (1) athi pagavan
எனக்கு என் தாய்தந்தையர் ஆதி. எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் அப்படித்தான். ஈரம், இளவெயில், இதமான காற்று -மூன்றும் நிலத்தில் பட்டால் விண் என்னும் உயிர் ஏறிப் பாசி முளைக்கிறது. எனவே பாசிக்கு ஆதி இந்த ஐந்தும். கோள்களுக்கும், விண்மீன்களுக்கும், ஒளிமண்டலங்களுக்கும் ஆதி அண்டம். அண்டப் பொருள்களுக்கும், அதன் அறிவாற்றலுக்கும், இயக்கத்திற்கும் ஆதி அண்டவெளி. அந்த வெளியை நாம் புரிந்துகொள்ள இயலாது. இதுவே ஆதி.
திருவள்ளுவர் அரசனைக் குடிமக்களுக்கு ஆதி என்கிறார். (543). எள்ளுக்குள் இருக்கும் எண்ணெயைப் பகவு என்கிறார் (889).
நமக்கு முதல் போட்டவர் ஆதி. நமக்குள்ளே பங்கு போட்டுக்கொண்டு இருப்பவர் பகவன். எனவே முதலாகவும் பங்காகவும் இருப்பவர் ஆதிபகவன்.
Athi-pagavan
What is this? It denotes the God. Who is God, it defines. He is in and out i.e. within us and without us. He, being without us is called aathi. He being within us is called bahavan / pagavan. He is part and parcel. Universe is the parcel i.e. aathi / aadti. You and I are the parts of the Universe. We are pahavan.
We know water molecule. In such away He is ‘Universe molecule’.
புதன், 14 ஜனவரி, 2009
தமிழியம் - உள்ளே
1- பைந்தமிழ் (பயிராக வளரும் தமிழ்)
2 - பழந்தமிழ் (சங்கத் தமிழ்)
2-1 --- 10 பாட்டு \ பத்துப்பாட்டு
2-2 --- 8 தொகை \ எட்டுத்தொகை
2-1 --- 10 பாட்டு \ பத்துப்பாட்டு
2-1 --- 1 --- குறிஞ்சிப்பாட்டு
2-1 --- 2 --- சிறுபாண் ஆற்றுப்படை
2-1 --- 3--- திருமுருகு ஆற்றுப்படை
2-1 --- 4 --- நெடுநல்வாடை
2-1 --- 5 --- பெரும்பாண் ஆற்றுப்படை
2-1 --- 6 --- பொருநர் ஆற்றுப்படை
2-1 --- 7 --- பட்டினப் பாலை
2-1 --- 8 --- மதுரைக் காஞ்சி
2-1 --- 9 --- மலைபடு கடாம்
2-1 --- 10 --- முல்லைப் பாட்டு
இவற்றின் செய்தி உரை
2-2-0 - 8 தொகை \ எட்டுத்தொகை
2-2-1 அகம் 400 \ அகநானூறு
2-2-2 ஐங்குறு நூறு
2-2-3 கலித்தொகை
2-2-4 குறுந்தொகை
2-2-5 நற்றிணை
2-2-6 பதிற்றுப் பத்து
2-2-7 பரிபாடல்
2-2-8 புறம் 400 \ புறநானூறு
இவற்றின் தொகுப்புச் செய்தி
2-3-1 \சங்கத்தமிழ் \செய்தி கண்ணோட்டத் தொகுப்பு
2-3-2 \சங்கத்தமிழ் \மொழிக் கண்ணோட்டம்
2-4 \சங்க காலப் புலவர்கள் \தரும் செய்திகள்
3-0 \ ௧௮ கீழ்க்கணக்கு \ பதினெண் கீழ்க்கணக்கு
இன்னும் பல

வெள்ளி, 9 ஜனவரி, 2009
பொங்கலோ வொங்கல்!
புத்தாண்டு புதுப்பொங்கல் என்ப தெல்லாம்
புத்தெழுச்சி பொதுமகிழ்வு பெறுதற் கென்றே
வித்திட்டு வளப்போமேல் வேண்டும் வேண்டும்
வேடிக்கை கேளிக்கை வேண்டாம் வேண்டாம்.
வாழ்த்திடவும் மகிழ்ந்திடவும் வரும்நாள் என்றால்
வளர்ந்திடுவோம் மலர்ந்திடுவோம் வாழ்வும் பொங்கும்
வீழ்த்திடும்பல் வெடியென்றால் வேண்டாம் வேண்டாம்
மேதினிக்கு நலமென்றால் வேண்டும் வேண்டும்.
நல்லாரும் வல்லாரும் நாடிக் கூடும்
நன்னாளாய் அந்நாள்கள் நடக்க வேண்டும்
இல்லார்க்கும் செல்வர்க்கும் இனிக்கும் நாளாய்
இருக்குமெனில் கொண்டாட்டம் வேண்டும் வேண்டும்.
பொதுவன் அடிகள்

கருத்து \ மொழி \ பதிவு
உள்ளம் முகத்தில் வாய்மொழியில்
உருவம் காட்டிப் பாய்ந்துவரும்
துள்ளும் அதனை முன்நிற்பார்
துய்க்க இயலும் கணநேரம்.
பேச்சின் உருவம் எழுத்துமொழி
பேணிக் கற்பார் அறிந்திடலாம்.
மூச்சாய் முன்னோர் பின்னோர்க்கு
மொழியும் பதிவே அவ்வெழுத்தாம்.
ஒலியின் எழுத்தோ ஓவியமோ
ஒத்துப் பலரும் பரிமாறில்
அலையும் நெஞ்சை அடுத்தவர்பால்
அள்ளி விதைத்து வளர்த்திடலாம்.
மொழிக்குப் படைத்த எழுத்துருவம்
முன்னோர் வழியில் நடைபயிலும்
அழிக்க வேண்டா! அறிவியலால்
அதுவே மாறும் அரவணைப்போம்.
சின்னக் குழந்தை தாய்அணைக்கும்
செழிக்கும் பருவம் காதலுக்காம்
பின்னர் முதுமை வான்பார்க்கும்
பெற்ற தாயை விலக்குவதோ?
சங்க நூல்கள் நமக்குத்தாய்
தள்ளி வைத்தல் சால்பாமோ?
தங்கை! தம்பி! நாம்ஒன்றாய்த் தாங்கிப்
பேணிப் போற்றிடுவோம்.
பொதுவன் அடிகள்
உருவம் காட்டிப் பாய்ந்துவரும்
துள்ளும் அதனை முன்நிற்பார்
துய்க்க இயலும் கணநேரம்.
பேச்சின் உருவம் எழுத்துமொழி
பேணிக் கற்பார் அறிந்திடலாம்.
மூச்சாய் முன்னோர் பின்னோர்க்கு
மொழியும் பதிவே அவ்வெழுத்தாம்.
ஒலியின் எழுத்தோ ஓவியமோ
ஒத்துப் பலரும் பரிமாறில்
அலையும் நெஞ்சை அடுத்தவர்பால்
அள்ளி விதைத்து வளர்த்திடலாம்.
மொழிக்குப் படைத்த எழுத்துருவம்
முன்னோர் வழியில் நடைபயிலும்
அழிக்க வேண்டா! அறிவியலால்
அதுவே மாறும் அரவணைப்போம்.
சின்னக் குழந்தை தாய்அணைக்கும்
செழிக்கும் பருவம் காதலுக்காம்
பின்னர் முதுமை வான்பார்க்கும்
பெற்ற தாயை விலக்குவதோ?
சங்க நூல்கள் நமக்குத்தாய்
தள்ளி வைத்தல் சால்பாமோ?
தங்கை! தம்பி! நாம்ஒன்றாய்த் தாங்கிப்
பேணிப் போற்றிடுவோம்.
பொதுவன் அடிகள்
1 கடமை உணர்வு
அன்பு நன்னீர் பாயட்டும்.
அறிவின் ஊற்று பொங்கட்டும்.
இன்பம் நமக்குள் இருக்கிறது.
எதிர்பார்க் காதே பிறரித்தில்.
வாழும் தமிழே பைந்தமிழாம்
வளர்த்த தமிழே பழந்தமிழாம்
நாளும் பேசி நன்கெழுதி
நமது தாயைக் காத்திடுவோம்
ஒன்று பட்டால் வாழ்வுயரும்
உதவி செய்தால் உதவிவரும்
நன்று செய்தால் நன்றிவரும்
நாடும் வீடும் நமதன்றோ
அன்பு அரவணைக்கும். பண்பு பாதுகாக்கும்.
உணவு உடலுக்குத் தெம்பு. உழைப்பு நாட்டுக்குத் தெம்பு.
இணைவோம். ஏற்றம் பெறுவோம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)