செவ்வாய், 22 டிசம்பர், 2009

கண்ணனும் சேலையும்

யமுனையில் குளித்த இடையர் பெண்களின் சேலையைத் திருடி மரத்தின்மேல் வைத்துக்கொண்டு கண்ணன் அப்பெண்களள அம்மணமாகப் பார்த்தான் என்கிறது பாகவதக் கதை. திருமால் அந்தப் பெண்களுக்குத் தழையாடை தைப்பதற்காக அவர்களாகவே தழை பறித்துக் கொள்ளும் வகையில் மரத்தை வளைத்துக் கொடுத்தான் என்கிறது சங்கப் பாடல்.
பெண்யானைக்கு ஆண்யயனை யா மரத்தை வளைத்துத் தின்னத் தருவது போல மாஅல் மரத்தை வளைத்துத் தந்தானான் என்கிறது சங்கப்பாடல்.

வடாஅது
வண்புனல் தொழுநை  வார்மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பபடி உணீஇயர் அங்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே  - (அகநானூறு 59. மருதன் இளநாகனார்.)

புதன், 16 டிசம்பர், 2009

fantasy கற்பனை

fantasy கற்பனை
வாழ்க்கையைப் பற்றிய கற்பனை வளம் தரும்.
கடவுளைப் பற்றிய கற்பனை காலத்தை வீணாக்கும்.
காலத்தைக் கரியாக்கக் கூடாது.
கனியாக்கிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திங்கள், 7 டிசம்பர், 2009

Heaven - முற்று - முற்றி - முத்தி - முக்தி

Heaven - முற்று - முற்றி - முத்தி - முக்தி
முற்றுப்புள்ளி வைத்த்தால் வாக்கியம் முடிந்தது என்று பொருள்.
பாடலின் இறுதியில் முற்றும் என்று எழுதுவார்கள்.
காய் முற்றினால் பழுத்தோ, நெற்றாகியோ அறுந்து விழுந்துவிடும்.
இப்படி முற்றுவதுதான்  முற்று - முற்றி - முத்தி - முக்தி.
மோட்சம் என்று ஒன்று இல்லை.
Heaven - என்பது மற்றவருக்கு நன்மை செய்ய, துன்பம் செய்யாமல் இருக்க முன்னோர் காட்டிய நப்பாசையும், அச்சுறுத்தலும் ஆகும்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

Energy சத்தி - சக்தி

Energy சத்தி - சக்தி
உடம்பில் சத்து இல்லை.
கீரையில் இரும்புச்சத்து மிகுதி.
இந்தச் 'சத்து'தான் சக்தி.
தமிழில் 'சத்து' என்பதை வடமொழியில் 'சக்தி' என்கின்றனர்.
சத்துப்பொருள் உண்டால் வலிமை பெருகும்.
வலிமையைச் 'சக்தி' என்கிறோம்.
உருவங்கள் கற்பனை.

திங்கள், 12 அக்டோபர், 2009

'sivayanama' 'சிவாயநம' மந்திரம்


'sivayanama' 'சிவாயநம' மந்திரம்
சிவம்+ஆயம்+நம
மரம்+அடி=மராஅடி,(மராடி) என்பது போலச் 'சிவாயம்' என்பதன் புணர்ச்சி அமைந்துள்ளது.
ஆய(ம்)+நம=ஆய நம - 'ந' முன் 'ம்' தோன்றாமல் மறைவது இயல்பு.
நம = நம்+அ
என் தலை = எனது தலை = என்+அது தலை. (இதில் 'அது' என்பது ஒருமை)
என கைகள் = என்+அ கைகள் (இதில் 'அ' என்பது பன்மை)
அதுபோல
'நம' (நம்+அ) 'அ' பன்மை
இந்த வகையில் 'நம்முடைய ஆயம் சிவம்' என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.
சிவம் = செம்மை = fair
Ours is fair-men society
We only are responsible for good or evil.
This is the meaning of 'sivayanama'
This is the 'theme' of 'sivayanama'

வியாழன், 8 அக்டோபர், 2009

'om namachivaya' மந்திரம்


'நமச்சிவாய' = 'நமச்சிவாயம்' = நம்+அச்சு+இவ்+ஆயம்
ஆயம் = நம்மோடு பழகும் ஆயத்தார்
நமக்கு அச்சு யார்?
நம் உயிரரைக் காப்பவர், உடலுக்கு உணவு வழங்குபவர், மனத்தைச் செம்மைப்படுத்துபவர், அறிவை வளர்ப்பவர் - எல்லாமே நம்மோடு பழகுபவர்கள்தானே!
அவர்கள்தானே நம் அச்சு.
இந்த மந்திரத்தைச் சொல்லுவோம். கடைப்பிடிப்போம்.
ஓம் = நான்+நீ+அவன்
ஒப்புநோக்குக - 'செய்வோம்' = 'செய்+வ்+ஓம்'
'ஓம் நமச்சிவாய'
Our axle is our 'society'
'om namachivaya'
View
Nice imagination and introspection. I wish everyone will look at the word this way - targeted towards the society rather than god!-Anban

அறம் என்றால் என்ன?


ஆறு ஓடுவது போல உலக மக்களை அரவணைத்துக் கொண்டு ஓடுவது அறம். ஆறு மண்ணின் தன்மையை வாங்கிக் கொள்கிறது. மண்ணுக்கு உதவுகிறது. உயிரினங்களுக்கு உணவாகிறது. இப்படிச் சமூகத்துக்கு உதவுவதுதான் அறம்.
உழைப்பையும், உடைமையையும் பங்குபோட்டு(அறுத்து) வழங்குவதுதான் அறம்.

ஞாயிறு, 21 ஜூன், 2009

மனம் Mind


கைகால்கள் இல்லை
ஊனமாகாது உலகளாவும்
மனம்

இது கவிமுகில் என்பவரின் Haiku கவிதை. மனம் வானளாவப் பறக்கும் என்பார்கள். வானத்தில் நமக்குத் தெரிந்தவை மீன்களும் கோள்களும் போன்றவையே. அவைகளும் தனித்தனி உலகங்கள். மனம் அவற்றையும் அளாவும். அவற்றில் இல்லாதவற்றையும் கற்பனை செய்யும் - இப்படிக் கவிதைச் செய்தி மேலும் விரியும்.

நூல் 'மூவடிச் சித்திரங்கள்' 'Feathered Esloons' பக்கம் 34

ஞாயிறு, 14 ஜூன், 2009

fate? நடப்பது நடந்தே தீரும்


"நடப்பது நடந்தே தீரும்" நம்விதி என்ப தில்லை
அடுத்தவர் சுற்றுச் சூழல் ஆக்கிய தாக்கம் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நம்கையில் ஒன்றும் இல்லை
நடப்பதும் தின்ப தும்யார் நாமன்றி அவனா கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நம்முடை எண்ணம் சொல்லாம்
படிப்பதும் நீதான் கண்ணா பார்ப்பதும் நீதான் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நடத்துவான் "அவன்"தான் என்றால்
துடிப்பது எதற்கோ கண்ணா சும்மாநீ இருக்க லாமே

"நடப்பது நடந்தே தீரும்" நம்பிட மில்லை யாரும்
உடுத்தியே உழைக்கின் றார்கள் ஓயாமல் உண்பார் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நல்லதேன் செய்ய வேண்டும்
அடுத்தவர் நம்மைக் காக்க அறிவதே உண்மை கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நடந்தது தீமை யானால்
இடுக்கிடும் கவலை தீர எண்ணிடும் "சாக்கு" கண்ணா

புதன், 10 ஜூன், 2009

இருவினை (திருக்குறள் 5) -2


கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
இன்பத்தையோ, துன்பத்தையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
பொருளையோ, அருளையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
போற்றுதலையோ தூற்றுதலையோ கொடுக்கிறோம், வாங்கிக்கொள்கிறோம்.
இவையும் இவை போன்றனவும் இருள்சேர் இருவினைகள்.
ஒளிசேர் வினை இந்த உண்மையை உணர்ந்து செயல்படுவதுதான்.
அதாவது ஒப்புரவோடு வாழ்வதுதான்.

திங்கள், 8 ஜூன், 2009

இருவினை (திருக்குறள் 5) - 1


அண்ட வெளியிலும் அணுக்குள்ளும் இயங்கும் வினைகள் இரண்டு.
இணை - இகல் (எதிர்)
இகலில் இரண்டு வகை
ஒன்று பகையின்றி விலகி மீண்டும் ஒன்று சேர்வது like photon
மற்றொன்று எதிர்க்கும் பகையாக மாறி அழிவது like chemical reaction
இவ்விரண்டும் சேராத தன்மையே இறை என்பது வள்ளுவர் கருத்து
நீர் அணுக்கள் இணைந்தே சொட்டுச் சொட்டாக ஒழுகும்
நீர்த்துளிகள் இணைந்தே ஆற்றில் ஓடும். வாய்க்காலில் பிரியும்.
உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டும் எதிர்த்து அழித்துக்கொண்டும் வாழும்.
இந்த இருவேறு நிலைகளை உணர்ந்துதான் வள்ளுவர் ଧஇருவினைଧ என்றார்.

உலகாயதம் (3) - குலோத்துங்கன்



குலோத்துங்கன் என்பவர் டாக்டர் வா, செ. குழந்தைசாமி
இவரது மரபுக் கவிதைதான் இது

பிறப்பதே ஆதி வாழ்வில்
பேறுகள் பெற்ற பின்னர்
இறப்பதே அந்தம், எல்லை
இரண்டிற்கும் முன்,பின் இல்லை

- நன்றி - இலக்கிய பீடம் - ஜூன் 2009

இறு < இற < இறப்பு < இறுதி
அம் < அமுங்கு =தோன்றியது அமுங்குதல்
அம் < அந்தில் =அவ்விடம் < அந்தம் -தமிழ்
நிலைநீரில் கல்லைப் போட்டால் அலை தோன்றி மறையும்.
காற்று மோதினாலும் அலை தோன்றி மோதி அழியும்.
உடலில் உயிர் இணைந்தால் பிறந்து வாழ்ந்து இறக்கும்.
உயிருக்கு முற்பிறவியோ பிற்பிறவியோ இல்லை.
நீரலைக்கோ காற்றலைக்கோ, முன்பிறவியோ பின்பிறவியோ உண்டா?
அது போலத்தான் நம் பிறவியும்.
(பொதுவன் அடிகள் விளக்கம்)

உலகாயதம் (2) - குலோத்துங்கன்



உடலுடன் ஒன்றி உள்ள
உயிரலால் ஆன்மா இல்லை
கடவுளென்(று) எவரும் இல்லை
காண்பது மட்டும் உண்மை

உலகு ஆயது அம் - அம் ஆற்றல்தான் அமுங்கி உலகு ஆயது
-பொதுவன் அடிகள்

குலோத்துங்கன் என்பவர் Dr. வா. செ. குழந்தைசாமி
- நன்றி - இலக்கிய பீடம் - ஜூன் 2009

உலகாயதம் (1) - குலோத்துங்கன்



உலகாயதம் (உலகு ஆயது அம்)
(அம்=அம்மை=ஆற்றல்=சக்தி களம்)
பார்வையில் தோன்றும் யாவும்
பற்பல வகையில் பூதச்
சேர்க்கையின் விளைவே அன்றித்
தெய்வத்தின் படைப்பொன் றில்லை

-குலோத்துங்கன் என்பவர் Dr. வா. செ. குழந்தைசாமி
-நன்றி இலக்கிய பீடம் -ஜூன் 2009

Fig. 1: In the collision theory of gas-phase chemical reactions, reaction occurs when two molecules collide, but only if the collision is sufficiently vigorous, (a) An insufficiently vigorous collision: the reactant molecules collide but bounce apart unchanged, (b) A sufficiently vigorous collision results in a reaction.

வெளி (புலவர் இரா இராமமூர்த்தி)


படம் - ஐன்ஸ்டீன்

வானத்தில் கிழக்கில்லை மேற்கும் இல்லை
வடக்கில்லை தெற்கில்லை திசையும் இல்லை
தானத்தில் கீழ்இல்லை மேலும் இல்லை
தனியேஓர் முன்இல்லை பின்னும் இல்லை
ஏனையநம் இடம்காலம் என்ப தெல்லாம்
இருபுள்ளிக்(கு) இடையிலுள்ள இயைபே ஆகும்
ஆனதனால் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை
அதைமீறி வளர்ந்ததையா, வானின் எல்லை.

நன்றி
(இலக்கிய பீடம் ஜூன் 2009 இதழில் வெளிவந்துள்ள மரபுக்கவிதை)

வெள்ளி, 5 ஜூன், 2009

பொறிவாயில் ஐந்து அவித்தான் (திருக்குறள்)







மெய், வய், கண், மூக்கு, செவி என்று நமக்கு 5 பொறிகள். 5 புலன்கள். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு வாயில். 5 வாயில்.



இந்த ஐந்தில் எதனாலும் தன்னை அறிய முடியாதவாறு இறைவன் அவித்து வைத்துவிட்டு நமக்குள்ளும் இருக்கிறான். அவனைப் பார்க்க முடியாது. அவன் பேசினால் கேட்க முடியாது. அவன் மணம் நமக்குத் தெரியாது. எனினும் அவன் மூச்சு நமக்குள் ஓடுகிறது. அவனைப் பற்றிப் பேசும் திறமை நமக்கு இல்லை. அவன் இயற்கையாக நம்மேல் உரசுகிறான். உணரமுடியவில்லை.



இதுதான் அவன் நம் பொறிவாயிலை அவித்து வைத்திருக்கும் நிலை.

ஞாயிறு, 3 மே, 2009

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (குறள் 140)



உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் (குறள் 140) ஒட்ட ஒழுகல் என்றால் என்ன? தண்ணீர் ஒட்டிக்கொண்டிருக்கும். ஒழுகும். ஒட்டிக்கொண்டே ஒழுகும். மண்ணின் தன்மையை ஒட்டிக்கொண்டே உருண்டோடும். உருண்டோடும்போது மண்ணின் தன்மையை விட்டுவிட்டுத் தூய்மையாகிவிடும். உலகம் அப்படியும் இப்படியுமாகத்தான் இருக்கும். எப்படியிருந்தாலும் அதனோடு நாம் தண்ணீரைப் போல ஒட்டிக்கொண்டே ஒழுக வேண்டும். வாழ்க்கை உருண்டோடும் ஓட்டத்தில் நம்மை நாமே தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு 'நீர்மை'(=ஒழுங்கு) என்று பெயர். உலகம் என்பதற்கு 'உயர்ந்தோர்' என்று பொருள் கூறுவர். உயர்ந்தோர் யார்? யாராலும் சொல்ல முடியாது.

வியாழன், 16 ஏப்ரல், 2009

தவம் என்றால் என்ன




தவ் < தவம்\ 'தவ்' என்றால் என்ன? திருவள்ளுவர் விளக்குகிறார். இருள் கௌவிக்கொண்டது. பசி கௌவிக்கொண்டது. -என்றெல்லாம் சொல்லும்போது கௌவுதல் என்றால் என்ன என்பது விளங்கும். அவனும் அவளும் காமத்தால் இணைந்திருந்தனர். இதனை ஊரார் 'ஒரு மாதிரியாக'ப் பேசினர். இது 'கௌவை'. இந்தக் கௌவை 'இன்னும் இன்னும் வேண்டும். அது இன்பம்' என்று அவர்கள் கருதுகின்றனர். (குறள் 1143) இந்தக் கௌவை காம இன்பத்தைக் கௌவிக் கொண்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் காமம் 'தவ்' என்னும் -என்கிறது மற்றொரு குறள். 'கௌவையால் கௌவிது காமம் அதுஇன்றேல் தவ்-என்னும் தன்மை இழந்து' (1144) தவ்- என்றால் என்ன? உப்புச் சப்பில்லா வாழ்க்கை. இந்தத் 'தவ்' என்னும் சொல்லிலிருந்து வந்ததுதான் 'தவம்'. தவம் என்பது உப்புச் சப்பில்லா வாழ்க்கை.

வியாழன், 9 ஏப்ரல், 2009

மலர்மிசை ஏகினான் -திருக்குறள் 3




மலர்வது மலர். உயிரினங்களில் மலர்வது என்ன? உடலில் வளர்சிதை மாற்றம். உணர்வில் எண்ணம்.


He blossoms as metabolism in our body and as thougts in our mind.

திங்கள், 30 மார்ச், 2009

குவளை - மலர் 4 - kuvalai - water lily.




குவளைப் பூவை ஆம்பல் பூவோடு ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆம்பல் பூ படம் 2-ல் தரப்பட்டுள்ளது.


செங்குவளை, கருங்குவளை, நீலம் என்றெல்லாம் இது நிறம் பற்றிப் பேசப்படும்

ஆம்பல் - மலர் 2 - aambal - water lily






ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது. மலர் -4 குவளை படம் பார்க்க
நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் - ஔவையார். நீர் உயர்ந்தால் ஆம்பல் உயர்ந்து மிதக்கும். நீர் தாழ்ந்தால் ஆம்பல் தாழ்ந்து மிதக்கும். அதுபோல மனம் உயர்ந்தால் மகிழ்வு உயரும். மனம் தாழ்ந்தால் மகிழ்வு குறையும்.
குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு - ஔவையார். கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்கள் குளத்தில் நீர் இருந்தால் வளரும். நீர் இல்லாதபோது தானும் காய்ந்து நீர் வந்ததும் மீண்டும் தழைத்துக் கொள்ளும். அதுபோல உறவினர் செல்வம் உள்ளபோதும் இல்லாதபோதும் சேர்ந்தே வாழவேண்டும்.





ஞாயிறு, 29 மார்ச், 2009

கோடல் - மலர் 62 - Kodal - white glory lily.


மலர் -1 காந்தள் மலரோடு இதனை ஒப்பிட்டுக்கொள்வோம்.

காந்தள் - மலர் 1 - Kanthal - Kaanthal - Glory-Lilly.




"ஒண் செங்காந்தள்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ள இந்தக் கார்த்திகைப் பூவை முருகனுக்கு உகந்தது என்பர்.


இம்மலருக்கு ஆறு இதழ். முருகனுக்கு ஆறு தலை. குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன்.


விண்மீன் கார்த்திகை உருவட்டத்தில் ஆறு மீன்கள்.


'வெண்காந்தள்' (கோடல் - மலர் 62) இதன் வகைகளில் ஒன்று.

மலர்கள் Flowers

இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் (பாடல் அடி 62 முதல் 96) 99 பூக்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மழை பெய்து நின்றதும் பருவ மகளிர் இவற்றுடன் பிற பூக்களையும் பறித்துவந்து பாறைமேல் குவித்து விளையாடி மகிழ்கின்றனர். பாடலில் உள்ளபடி பூக்களுக்கு வரிசை எண் தரப்பட்டுப் படத்துடன் இத் தளத்தில் உலவ விடப்பட்டுள்ளன. பாடலைப் பாடியவர் கபிலர்.

புதன், 18 மார்ச், 2009

mind rope மனக்கயிறு


அன்புக் கயிறு அணைக்கும்
ஆசைக் கயிறு பிணிக்கும்
இன்பக் கயிறு இறுக்கும்
ஈசன் கயிறு உருக்கும்

உறவுக் கயிறு உலவும்
உதவிக் கயிறு நீளும்
நிறைவுக் கயிறே வீடாம்
நேயக் கயிறே வாழ்வாம்

வியாழன், 12 மார்ச், 2009

கபிலர் - Kabilar

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய தொகுப்புகளில் கிடைத்துச் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 2381. அவற்றில் கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் 235. மொத்தப் பாடல்களில் இது எவ்வளவு?

செவ்வாய், 3 மார்ச், 2009

அவன் - நான்


அவன் - நான் (அவன் = இறைவன் = He)
தந்தை உயிரணுவைத் தாய் வயிற்றில் சேர்த்தான்.
தாயின் உயிரணு அதனுடன் இணைந்து வளர்ந்தது.
பிறந்துள்ளேன்.
உயிரணு = DNA
உறங்கும் வானம் அவன்
உலவும் நிலம், நீர், காற்று, தீ அவள்
அவன் உயிர் அவள் சத்தியோடு (சத்தோடு) சேர்ந்து 'நான்' இருக்கிறேன்

திங்கள், 2 மார்ச், 2009





கண்ணன் - 1
கண்ணில் இருப்பவன் கண்ணன். யார் கண்ணில்? என் கண்ணில். உன் கண்ணில் இருக்கும் கண்ணன் யாரோ! எனக்குத் தெரியவில்லை. நீ கண்ணன் படம் போட்டால் உன் கண்ணில் இருப்பவனைத் தானே போடுவாய். நீ சிலை செய்தால் உன் கண்ணில் இருப்பவனைத் தானே செதுக்குவாய். எல்லாருடைய கண்ணிலும் ஒரே கண்ணன் இருக்கின்றான் என்றால் இந்த உருவங்கள் எல்லாமே ஒன்றாக இருக்க வேண்டுமே!

என் மகன் வெளியூரில் இருக்கிறான். அவன் என் கண்ணில் இருக்கிறான். கண் = கருத்து

ஞாயிறு, 1 மார்ச், 2009

புகழ்


புகழ் என்பது ஒருவருக்குப் பிறர் தரும் வெளிச்சம். வள்ளுவர் புகழை 'ஒளி' என்கிறார்.
கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். நம் முகத்தில் வெளிச்சம் பட்டால் முகம் நன்றாகத் தெரியும். கண்ணாடியில் மட்டும் வெளிச்சம் பட்டால் நம் முகம் தெரியுமா? காசு கொடுத்து வாங்கும் புகழ் கண்ணாடியில் வீசும் வெளிச்சம் போன்றது. புகழ் நன்னிலத்தில் பெய்யும் மழை போன்றது. ஓடிவிடும். ஊறவும் செய்யும்.

சனி, 28 பிப்ரவரி, 2009

soul \ life \ ஆன்மா என்ன செய்யும்?


ஆன்மா என்ன செய்யும்?
வெயில் ஈரத்தை உறிஞ்சித் தனதாக மாற்றிக்கொள்ளும்.
நீர் வெயிலிலுள்ள ஈரத்தை உறிஞ்சித் தனதாக மாற்றிக்கொள்ளும்.
அதுபோல
ஆன்மா உயிரை எடுத்துக்கொள்ளும்.
உயிர் ஆன்மாவிலிருந்து பிரிந்தும் இயங்கும்.
ஆன்மாவை வெயிலோடும் உயிரை நீரோடும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்வோம்.

ஆன்மா \ உயிர் - soul \ life


ஆன்மாவும் உயிரும் ஒன்றா அல்லது வெவ்வேறா?
எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
உன் உயிர். என் உயிர். அவன் உயிர். அதன் உயிர். - இவை ஒவ்வொன்றும் வெவ்வேறானவை.
நிலம், நீர், தீ, காற்று இவற்றின் உயிர்கள் வெவ்வேறானவை.
இவற்றையும், இவை அல்லாதவற்றையும் அரவணைத்துக்கொண்டு, இவற்றுக்குள்ளும், இவற்றிற்கு வெளியேயும் இயங்குவதும் உறங்குவதும்தான் ஆன்மா.

புதன், 25 பிப்ரவரி, 2009

கலைமகள், அலைமகள், மலைமகள்




கலைமகள் படைப்பாளியின் நாவில் இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
அலைமகள் திருமாலின் நெஞ்சில் இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
மலைமகள் சிவபெருமானின் பாதியாக இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
கல்வி பயில்கிறோம். ஆசிரியரின் நாக்குத்தானே நமக்குச் சொல்லித் தருகிறது.
உடைமையைத்தானே திரு என்கிறோம். அன்புடைமை, அருளுடைமை, அறிவுடைமை, பொருளுடைமை, என்பதெல்லாம் என்ன? மனத்தின் தன்மைதானே.
உயிரும் உடலும் ஒன்றி உறங்குவது சிவம். அவை எழுச்சி பெறும்போது சத்து சத்தியாக (சக்தியாக)வெளிப்படுகிறது. இப்படி நாம் சிவம் பாதி, சத்தி பாதி என்னும் நிலையில்தானே இருக்கிறோம். தத்துவம் புரிந்திருக்கும்.

வியாழன், 19 பிப்ரவரி, 2009

பஃறி = பற்றி = பத்தி = பக்தி = இறைவனடி


ஆற்றைக் கடக்க உதவும் தெப்பத்தைப் 'பஃறி' என்றனர் (பட்டினப்பாலை -அடி 9). பல வகையான நில வளங்களும் பற்றிக் கிடக்கும் இடத்தைப் 'பஃறிணை' என்றனர் (பொருநராற்றுப்படை -221). தொல்காப்பியர் பத்தைப் 'பஃதென் கிளவி' என்கிறார் (குற்றியலுகரப் புணரியல் -40). பல தீய நோயைப் 'பஃறீநோய்' என்றனர் (புறம் 185-6). 'து' என்னும் சொல் பற்றுக்கோடாக நிற்கும் துணையைக் குறிக்கும் (காண்க. இத்தளம் 'துப்பு' விளக்கம்). பற்றும் துணையாக இருக்கும் தெப்பத்தைப் 'பஃறி' என்ற தமிழர், பற்றுக்கோடாக இருக்கும் இறைவனையும் 'பஃறி' என்று கொண்டனர். (திருவள்ளுவர் இறைவன் அடியைப் 'பஃறி' என்று உருவகம் செய்துள்ளார் (குறள் 10)
இவற்றைத் தமிழ்மொழியின் பாங்கில் எண்ணும்போது பஃறி < பற்றி <பத்தி என்று வளர்ந்துள்ள செந்தமிழ்ச் சொல்லைக் காணமுடிகிறது. 'பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே ... அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே' என்று நாவுக்கரசர் பாடும்போது பக்தனைப் பத்தன் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இதனை வடமொழியில் 'பக்தி' என்பர். இறைவனைப் பஃறியாகக் கருதுவதும், இறைவன்மீது பற்று வைப்பதும் 'பத்தி' . 'பக்தி' > 'பத்தி' >பற்றி >பஃறி > பற்று > பல் து (பல வகையாகத் துணை நிற்கும் பற்றுக்கோடுகள்). இச்சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றது என்பதற்கு இந்த விளக்கம் போதும்.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

இறந்தார் (திருக்குறள் 22, 42, 145, 146, 152, 159, 283, 310, 432, 476, 531, 885, 977, 1138, 1157, 1254, 1275,


திருக்குறள் இறத்தல் என்னும் சொல்லோடு தொடர்புடைய சொற்களை 17 இடங்களில் கையாண்டுள்ளது.

இறந்தார் யார்?

தொல்காப்பியம் தெளிவு படுத்முகிறது.

'காமம் சான்ற கடைகோட் காலை
ஏமம் சான்ற தக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் 51)

முதிர்ந்த வயதில் இளையோருக்கு வழிகாட்டியாய் நல்லனவற்றைத் பயிற்றுவித்துக் கொண்டு மனைவி மக்களோடு சேர்ந்து வாழ்பவர்.

இவர்களுக்கு இல் வாழ்வான் துணை.
இவர்களின் இன்னாச்சொல் நோற்கப்பட வேண்டும்.
இவர்கள் சினம் துறந்து இறந்தவர்

இறந்தார்க்கு இல்வாழ்வான் துணை -42,
இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்க -159
இறந்தார் இறந்தார் அனையர் -310

வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று -22 (செத்தவர்)

இறப்பே புரிந்த தொழில் -977 (வரம்பு கடத்தல்)
இல் இறப்பான் -145, 146, (வரம்பு கடத்தல்)
இறப்பினைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் -152 (வரம்பு கடத்தல்)
அளவு இறந்து -283 (வரம்பு கடத்தல்)
மாண்பு இறந்த மானம் -432 (வரம்பு கடத்தல்)
நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் -476 (வரம்பு கடத்தல்)
இறந்த வெகுளி -531 (வரம்பு கடத்தல்)
இறன் முறை -885 (வரம்பு கடத்தல்)
மறை இறந்து மன்று படும் -1138, 1254 (வரம்பு கடத்தல்)
இறை இறவாநின்ற வளை -1157 (வரம்பு கடத்தல்)
தொடி செய்து இறந்த கள்ளம் -1275 (வரம்பு கடத்தல்)

சனி, 7 பிப்ரவரி, 2009

இறைவன் அடி (திருக்குறள் 3, 4, 10, 208, 544, 610, 1120, 1279)


நம் அடி நிலத்தில் நிற்கும். இறைவன் அடி எங்கே நிற்கும்? அவரர் மனத்தில் தானே நிற்கும். அதைத்தானே வள்ளுவர் மலர்மிசை ஏகினான் என்கிறார். மனந்தானே நினைத்தபோதெல்லாம், நினைக்கிறபடியெல்லாம் மலர்கிறது. பின் ஏன் இறைவனை வெளியில் தேடுகிறோம். வெளியில் வணங்குகிறோம். (3, 4, 10)

நம் உடலின் நிழல் நம்மைத் தொடர்வது போல, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் இறைவன் நம் மனத்தைத் தொடர்கிறான் (208)

அரசன் குடிமக்களைத் தழுவி ஆட்சி புரிகிறான். குடிமக்கள் அவனது அடியைத் தழுவி நிற்கின்றனர். இறைவனும் அப்படித்தான். (544)

நம் மனத்தில் அவன் அடிவைத்து நடக்கிறான் (610)

இறைவன் அடி அனிச்சமலர் போன்றது. நம் மனம் அடுத்தவர் மனத்தைத் துன்புறுத்த நினைத்தால் அவன் அடி நோகும் (1120)

அவள் கழலும் தன் வளையலைப் பார்த்தாள். மெலியும் தோள்களைப் பார்த்தாள். தன் அடியையும், அவன் அடியையும் பார்த்தாள். இந்தப் பார்வையால் அவள் என்ன சொன்னாள். இணைந்தேன், இணைவோம் என்றாள். (1279) நாமும் இறைவனோடு இப்படித்தான் இளகி இணையவேண்டும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

Tirukkural திருக்குறள் (1-10)

Lord
இறை < இறவன்
1
Aathi pagavan

ஆதிபகவு < ஆதி பகவன்
The root, the capital, the source, etc of a life or a thing are called ‘aathi’ in Tamil. The development, the growth, the existence, etc of a life or thing are called ‘pagavu’ in Tamil. I came from my parent’s DNA. I gave my DNA to my children. I being a root of my parents become a root to my children. Habits, thought, etc are the roots of my doings. Where they come from? From my gene and surroundings they came from. My gene, I can not renounce. My thought, the society impacts on me. My doings, I can prefer.
2
arivu (knowledge and experience)
அறிவு < அறிவன்
The mingling of life in a body evolves knowledge. Organs provide knowledge within their capacity, i.e. not beyond. Experience is gained by the impact of the ecology and society. The knowledge and experience are called ‘arivu’ in Tamil. You have some knowledge and experience of your own. I have some knowledge and experience of my own. He has some knowledge and experience of his own. A cow has its knowledge and experience of its own. Water, air and heat flow according to their knowledge and experience. The totality of all the knowledge and experience are called ‘vaalarivu’ in Tamil.
3
Malar (mind)
மலர் (மிசை ஏகினான்)
The mind that blossoms in a living being is metaphor as flower. Knowledge and experience are recorded in the mind. It blossoms when ever it needs to compare with or compare to other knowledge and experience gained in the past, to guide future.
வளரும்

புதன், 28 ஜனவரி, 2009

நெடுநல்வாடை (செய்தி ஓட்டச் சுருக்கம்

அகத்திணை \தலைவன் பிரிவைத் தலைவி ஆற்றிக்கொண்டு இருக்கும் உரிப்பொருளைப் பார்க்கும்போது முல்லைத் திணை \தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் நிலையை உரிப்பொருளாகக் கொண்டால் பாலைத்திணை \பாசறையில் இருக்கும் அரசனின் மெய்க்காப்பாளனது வேலில் வேப்பந்தழை கட்டப்பட்டிருந்ததைக் கூறுவதால் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டு புறத்திணை என்பர்.

செவ்வாய், 27 ஜனவரி, 2009

திருமுருகாற்றுப்படை (செய்தி ஓட்டச் சுருக்கம்)


முதுவாய் இரவல!(ன்)(அடி 284) செவ்வேள் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு ( 61)
செலவு நீ நயந்தனை ஆயின் (64)
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே (66)

கூடல் குடவயின் (71) குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதாஅன்று, (77)
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதாஅன்று (125),
ஏரகத்து உறைதலும் உரியன், அதாஅன்று (188),
ஆவினன்குடி அசைதலும் உரியன். அதாஅன்று (176),
தோள் பல் பிணை தழீஇ குன்றுதோறு ஆடலும் நின்றதன் பண்பே, அதாஅன்று (217)
முருகு ஆற்றுப்படுத்த உருகெழு வியன் நகர் (244)ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே (249)
இழும் என இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலை கிழவோனே (317)

அதாஅன்று = அதுவுமல்லாமல்

1 திருப்பரங்குன்றம், 2 திருச்சீர் அலைவாய், 3 திரு ஏரகம், 4 திரு ஆவினன்குடி, 5 குன்றிருக்கும் இடமெல்லாம் தோள்பிணை தழுவி துணங்கை ஆடல், 6 முருகனுக்கு விழாக் கொண்டாடும் இடமெல்லாம் உறைவான். (அவன் யார்?) பழமுதிர் சோலை மலைகிழவோன்

வலன் ஏர்பு திரிதரு ... ஞாயிறு கடல் கண்டு ஆங்கு (1),மனன் ஏர்பு திரிதரு வால் நிற முகனே (90)

வலனேர்பு (வலன் ஏர்பு, வலன் நேர்பு) திரிதரு ஞாயிறு (1)
மனனேர்பு (மனன் ஏர்பு, மனன் நேர்பு) எழுதரு (ஆறு)முகன் (90)

ஞாயிறு வானில் திரிவது போல, முருகன் மனத்தில் எழுகிறான்.