திங்கள், 8 ஜூன், 2009

வெளி (புலவர் இரா இராமமூர்த்தி)


படம் - ஐன்ஸ்டீன்

வானத்தில் கிழக்கில்லை மேற்கும் இல்லை
வடக்கில்லை தெற்கில்லை திசையும் இல்லை
தானத்தில் கீழ்இல்லை மேலும் இல்லை
தனியேஓர் முன்இல்லை பின்னும் இல்லை
ஏனையநம் இடம்காலம் என்ப தெல்லாம்
இருபுள்ளிக்(கு) இடையிலுள்ள இயைபே ஆகும்
ஆனதனால் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை
அதைமீறி வளர்ந்ததையா, வானின் எல்லை.

நன்றி
(இலக்கிய பீடம் ஜூன் 2009 இதழில் வெளிவந்துள்ள மரபுக்கவிதை)

2 கருத்துகள்:

Anguraj சொன்னது…

அற்புதம்!

இதை தேடி அலைந்திடும் விஞ்ஞானம் சென்று
சேர்ந்திடும் கடையினிலோ ஆன்மீக எல்லை!

பொதுவன் அடிகள் சொன்னது…

அருள்நிறை அங்குராஜ் விஞ்ஞானம் சென்றடையும் வானக் கடலுக்கு ஆன்மீகம் எல்லை என்கிறார். விஞ்ஞானத்தில் ஒருவர் கண்டதை பிறருக்குக் காட்டுகிறார். ஆன்மீகத்தில் அது முடியாது.