ஞாயிறு, 14 ஜூன், 2009

fate? நடப்பது நடந்தே தீரும்


"நடப்பது நடந்தே தீரும்" நம்விதி என்ப தில்லை
அடுத்தவர் சுற்றுச் சூழல் ஆக்கிய தாக்கம் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நம்கையில் ஒன்றும் இல்லை
நடப்பதும் தின்ப தும்யார் நாமன்றி அவனா கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நம்முடை எண்ணம் சொல்லாம்
படிப்பதும் நீதான் கண்ணா பார்ப்பதும் நீதான் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நடத்துவான் "அவன்"தான் என்றால்
துடிப்பது எதற்கோ கண்ணா சும்மாநீ இருக்க லாமே

"நடப்பது நடந்தே தீரும்" நம்பிட மில்லை யாரும்
உடுத்தியே உழைக்கின் றார்கள் ஓயாமல் உண்பார் கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நல்லதேன் செய்ய வேண்டும்
அடுத்தவர் நம்மைக் காக்க அறிவதே உண்மை கண்ணா

"நடப்பது நடந்தே தீரும்" நடந்தது தீமை யானால்
இடுக்கிடும் கவலை தீர எண்ணிடும் "சாக்கு" கண்ணா

கருத்துகள் இல்லை: