திங்கள், 8 ஜூன், 2009

உலகாயதம் (3) - குலோத்துங்கன்



குலோத்துங்கன் என்பவர் டாக்டர் வா, செ. குழந்தைசாமி
இவரது மரபுக் கவிதைதான் இது

பிறப்பதே ஆதி வாழ்வில்
பேறுகள் பெற்ற பின்னர்
இறப்பதே அந்தம், எல்லை
இரண்டிற்கும் முன்,பின் இல்லை

- நன்றி - இலக்கிய பீடம் - ஜூன் 2009

இறு < இற < இறப்பு < இறுதி
அம் < அமுங்கு =தோன்றியது அமுங்குதல்
அம் < அந்தில் =அவ்விடம் < அந்தம் -தமிழ்
நிலைநீரில் கல்லைப் போட்டால் அலை தோன்றி மறையும்.
காற்று மோதினாலும் அலை தோன்றி மோதி அழியும்.
உடலில் உயிர் இணைந்தால் பிறந்து வாழ்ந்து இறக்கும்.
உயிருக்கு முற்பிறவியோ பிற்பிறவியோ இல்லை.
நீரலைக்கோ காற்றலைக்கோ, முன்பிறவியோ பின்பிறவியோ உண்டா?
அது போலத்தான் நம் பிறவியும்.
(பொதுவன் அடிகள் விளக்கம்)

2 கருத்துகள்:

ஹரன் சொன்னது…

முன் - பின் பிறவிகள் இல்லையெனில், ‘பிறவிப் பெருங்கடல்' என்று வள்ளுவர் ஏன் கூறுகிறார்; ‘வாழ்க்கைப் பெருங்கடல்' என்று கூறியிருக்கலாமே? வாழ்க்கையைத்தான், பிறவி என இங்கு குறிப்பிடுகிறார் என்றால், எல்லோரும்தான் சாகிறோம்; இதில் 'நீந்துவர்' யார்? ‘நீந்தார்' யார்?

மேலும் உறக்கம்-விழிப்பு, இறப்பும்-பிறப்பும் வள்ளுவரால் சமப்படுதப்படும்போது, நம் பிறவியும் பல என்ற பொருள் வருகிறதே ஐயா!

பொதுவன் அடிகள் சொன்னது…

கருத்துக் கணியனார் ஹரன் அவர்களின் கண்ணோடத்துகுப் பாராட்டு. நேற்றிருந்த கடல் வேறு. இன்றிருக்கும் கடல் வேறு. நாளை இருக்கப்போகும் கடல் வேறு. - என்கிறீர்கள். இருந்துவிட்டுப் போகட்டும்.