"ஒண் செங்காந்தள்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ள இந்தக் கார்த்திகைப் பூவை முருகனுக்கு உகந்தது என்பர்.
இம்மலருக்கு ஆறு இதழ். முருகனுக்கு ஆறு தலை. குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன்.
விண்மீன் கார்த்திகை உருவட்டத்தில் ஆறு மீன்கள்.
'வெண்காந்தள்' (கோடல் - மலர் 62) இதன் வகைகளில் ஒன்று.
2 கருத்துகள்:
ஐயா,
வணக்கம்.
படங்கள் அருமை!
'கோடல்' - காந்தளில் ஒரு வகையா?
( சொல் சரிபார்ப்பை எடுத்து விடலாமே!)
அன்பன்,
த.ந.
கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு சங்க நூல்களில் ஒன்று. அதில் 99 பூக்களைப் பறித்துக் குவித்து மகளிர் விளையாடினர் என்று வருகிறது.கோடல் என்பது வெண்காந்தள். காந்தள் என்று வொதுப்படக் கூறினால் அது செங்காந்தள். 99 பூவில் இவை இரண்டும் தனித்தனியே குறிப்பிடப் பட்டுள்ளன. கோடல் மலரை இந்த வலைதளத்தில் தனியே காணலாம்.
கருத்துரையிடுக