சனி, 28 பிப்ரவரி, 2009

soul \ life \ ஆன்மா என்ன செய்யும்?


ஆன்மா என்ன செய்யும்?
வெயில் ஈரத்தை உறிஞ்சித் தனதாக மாற்றிக்கொள்ளும்.
நீர் வெயிலிலுள்ள ஈரத்தை உறிஞ்சித் தனதாக மாற்றிக்கொள்ளும்.
அதுபோல
ஆன்மா உயிரை எடுத்துக்கொள்ளும்.
உயிர் ஆன்மாவிலிருந்து பிரிந்தும் இயங்கும்.
ஆன்மாவை வெயிலோடும் உயிரை நீரோடும் ஒப்பிட்டு உணர்ந்துகொள்வோம்.

ஆன்மா \ உயிர் - soul \ life


ஆன்மாவும் உயிரும் ஒன்றா அல்லது வெவ்வேறா?
எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.
உன் உயிர். என் உயிர். அவன் உயிர். அதன் உயிர். - இவை ஒவ்வொன்றும் வெவ்வேறானவை.
நிலம், நீர், தீ, காற்று இவற்றின் உயிர்கள் வெவ்வேறானவை.
இவற்றையும், இவை அல்லாதவற்றையும் அரவணைத்துக்கொண்டு, இவற்றுக்குள்ளும், இவற்றிற்கு வெளியேயும் இயங்குவதும் உறங்குவதும்தான் ஆன்மா.

புதன், 25 பிப்ரவரி, 2009

கலைமகள், அலைமகள், மலைமகள்




கலைமகள் படைப்பாளியின் நாவில் இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
அலைமகள் திருமாலின் நெஞ்சில் இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
மலைமகள் சிவபெருமானின் பாதியாக இருக்கிறாள் என்கிறார்கள். என்ன பொருள்?
கல்வி பயில்கிறோம். ஆசிரியரின் நாக்குத்தானே நமக்குச் சொல்லித் தருகிறது.
உடைமையைத்தானே திரு என்கிறோம். அன்புடைமை, அருளுடைமை, அறிவுடைமை, பொருளுடைமை, என்பதெல்லாம் என்ன? மனத்தின் தன்மைதானே.
உயிரும் உடலும் ஒன்றி உறங்குவது சிவம். அவை எழுச்சி பெறும்போது சத்து சத்தியாக (சக்தியாக)வெளிப்படுகிறது. இப்படி நாம் சிவம் பாதி, சத்தி பாதி என்னும் நிலையில்தானே இருக்கிறோம். தத்துவம் புரிந்திருக்கும்.

வியாழன், 19 பிப்ரவரி, 2009

பஃறி = பற்றி = பத்தி = பக்தி = இறைவனடி


ஆற்றைக் கடக்க உதவும் தெப்பத்தைப் 'பஃறி' என்றனர் (பட்டினப்பாலை -அடி 9). பல வகையான நில வளங்களும் பற்றிக் கிடக்கும் இடத்தைப் 'பஃறிணை' என்றனர் (பொருநராற்றுப்படை -221). தொல்காப்பியர் பத்தைப் 'பஃதென் கிளவி' என்கிறார் (குற்றியலுகரப் புணரியல் -40). பல தீய நோயைப் 'பஃறீநோய்' என்றனர் (புறம் 185-6). 'து' என்னும் சொல் பற்றுக்கோடாக நிற்கும் துணையைக் குறிக்கும் (காண்க. இத்தளம் 'துப்பு' விளக்கம்). பற்றும் துணையாக இருக்கும் தெப்பத்தைப் 'பஃறி' என்ற தமிழர், பற்றுக்கோடாக இருக்கும் இறைவனையும் 'பஃறி' என்று கொண்டனர். (திருவள்ளுவர் இறைவன் அடியைப் 'பஃறி' என்று உருவகம் செய்துள்ளார் (குறள் 10)
இவற்றைத் தமிழ்மொழியின் பாங்கில் எண்ணும்போது பஃறி < பற்றி <பத்தி என்று வளர்ந்துள்ள செந்தமிழ்ச் சொல்லைக் காணமுடிகிறது. 'பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே ... அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே' என்று நாவுக்கரசர் பாடும்போது பக்தனைப் பத்தன் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இதனை வடமொழியில் 'பக்தி' என்பர். இறைவனைப் பஃறியாகக் கருதுவதும், இறைவன்மீது பற்று வைப்பதும் 'பத்தி' . 'பக்தி' > 'பத்தி' >பற்றி >பஃறி > பற்று > பல் து (பல வகையாகத் துணை நிற்கும் பற்றுக்கோடுகள்). இச்சொல் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றது என்பதற்கு இந்த விளக்கம் போதும்.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

இறந்தார் (திருக்குறள் 22, 42, 145, 146, 152, 159, 283, 310, 432, 476, 531, 885, 977, 1138, 1157, 1254, 1275,


திருக்குறள் இறத்தல் என்னும் சொல்லோடு தொடர்புடைய சொற்களை 17 இடங்களில் கையாண்டுள்ளது.

இறந்தார் யார்?

தொல்காப்பியம் தெளிவு படுத்முகிறது.

'காமம் சான்ற கடைகோட் காலை
ஏமம் சான்ற தக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் 51)

முதிர்ந்த வயதில் இளையோருக்கு வழிகாட்டியாய் நல்லனவற்றைத் பயிற்றுவித்துக் கொண்டு மனைவி மக்களோடு சேர்ந்து வாழ்பவர்.

இவர்களுக்கு இல் வாழ்வான் துணை.
இவர்களின் இன்னாச்சொல் நோற்கப்பட வேண்டும்.
இவர்கள் சினம் துறந்து இறந்தவர்

இறந்தார்க்கு இல்வாழ்வான் துணை -42,
இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்க -159
இறந்தார் இறந்தார் அனையர் -310

வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று -22 (செத்தவர்)

இறப்பே புரிந்த தொழில் -977 (வரம்பு கடத்தல்)
இல் இறப்பான் -145, 146, (வரம்பு கடத்தல்)
இறப்பினைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் -152 (வரம்பு கடத்தல்)
அளவு இறந்து -283 (வரம்பு கடத்தல்)
மாண்பு இறந்த மானம் -432 (வரம்பு கடத்தல்)
நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் -476 (வரம்பு கடத்தல்)
இறந்த வெகுளி -531 (வரம்பு கடத்தல்)
இறன் முறை -885 (வரம்பு கடத்தல்)
மறை இறந்து மன்று படும் -1138, 1254 (வரம்பு கடத்தல்)
இறை இறவாநின்ற வளை -1157 (வரம்பு கடத்தல்)
தொடி செய்து இறந்த கள்ளம் -1275 (வரம்பு கடத்தல்)

சனி, 7 பிப்ரவரி, 2009

இறைவன் அடி (திருக்குறள் 3, 4, 10, 208, 544, 610, 1120, 1279)


நம் அடி நிலத்தில் நிற்கும். இறைவன் அடி எங்கே நிற்கும்? அவரர் மனத்தில் தானே நிற்கும். அதைத்தானே வள்ளுவர் மலர்மிசை ஏகினான் என்கிறார். மனந்தானே நினைத்தபோதெல்லாம், நினைக்கிறபடியெல்லாம் மலர்கிறது. பின் ஏன் இறைவனை வெளியில் தேடுகிறோம். வெளியில் வணங்குகிறோம். (3, 4, 10)

நம் உடலின் நிழல் நம்மைத் தொடர்வது போல, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் இறைவன் நம் மனத்தைத் தொடர்கிறான் (208)

அரசன் குடிமக்களைத் தழுவி ஆட்சி புரிகிறான். குடிமக்கள் அவனது அடியைத் தழுவி நிற்கின்றனர். இறைவனும் அப்படித்தான். (544)

நம் மனத்தில் அவன் அடிவைத்து நடக்கிறான் (610)

இறைவன் அடி அனிச்சமலர் போன்றது. நம் மனம் அடுத்தவர் மனத்தைத் துன்புறுத்த நினைத்தால் அவன் அடி நோகும் (1120)

அவள் கழலும் தன் வளையலைப் பார்த்தாள். மெலியும் தோள்களைப் பார்த்தாள். தன் அடியையும், அவன் அடியையும் பார்த்தாள். இந்தப் பார்வையால் அவள் என்ன சொன்னாள். இணைந்தேன், இணைவோம் என்றாள். (1279) நாமும் இறைவனோடு இப்படித்தான் இளகி இணையவேண்டும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

Tirukkural திருக்குறள் (1-10)

Lord
இறை < இறவன்
1
Aathi pagavan

ஆதிபகவு < ஆதி பகவன்
The root, the capital, the source, etc of a life or a thing are called ‘aathi’ in Tamil. The development, the growth, the existence, etc of a life or thing are called ‘pagavu’ in Tamil. I came from my parent’s DNA. I gave my DNA to my children. I being a root of my parents become a root to my children. Habits, thought, etc are the roots of my doings. Where they come from? From my gene and surroundings they came from. My gene, I can not renounce. My thought, the society impacts on me. My doings, I can prefer.
2
arivu (knowledge and experience)
அறிவு < அறிவன்
The mingling of life in a body evolves knowledge. Organs provide knowledge within their capacity, i.e. not beyond. Experience is gained by the impact of the ecology and society. The knowledge and experience are called ‘arivu’ in Tamil. You have some knowledge and experience of your own. I have some knowledge and experience of my own. He has some knowledge and experience of his own. A cow has its knowledge and experience of its own. Water, air and heat flow according to their knowledge and experience. The totality of all the knowledge and experience are called ‘vaalarivu’ in Tamil.
3
Malar (mind)
மலர் (மிசை ஏகினான்)
The mind that blossoms in a living being is metaphor as flower. Knowledge and experience are recorded in the mind. It blossoms when ever it needs to compare with or compare to other knowledge and experience gained in the past, to guide future.
வளரும்