பழமையில் பாடம் படி \ பழமையைப் புதுமையாக்கு \ பைந்தமிழ்ப் பயிர்செய் \ பழந்தமிழ்த் தாய்ப் பேண்
திங்கள், 30 மார்ச், 2009
ஆம்பல் - மலர் 2 - aambal - water lily
ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது. குவளை கூர்மை இல்லாது வளைந்த இதழ்களைக் கொண்டது. மலர் -4 குவளை படம் பார்க்க
நீர் அளவே ஆகுமாம் நீராம்பல் - ஔவையார். நீர் உயர்ந்தால் ஆம்பல் உயர்ந்து மிதக்கும். நீர் தாழ்ந்தால் ஆம்பல் தாழ்ந்து மிதக்கும். அதுபோல மனம் உயர்ந்தால் மகிழ்வு உயரும். மனம் தாழ்ந்தால் மகிழ்வு குறையும்.
குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறுவார் உறவு - ஔவையார். கொட்டி, ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்கள் குளத்தில் நீர் இருந்தால் வளரும். நீர் இல்லாதபோது தானும் காய்ந்து நீர் வந்ததும் மீண்டும் தழைத்துக் கொள்ளும். அதுபோல உறவினர் செல்வம் உள்ளபோதும் இல்லாதபோதும் சேர்ந்தே வாழவேண்டும்.
ஞாயிறு, 29 மார்ச், 2009
காந்தள் - மலர் 1 - Kanthal - Kaanthal - Glory-Lilly.
மலர்கள் Flowers
இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலப் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டில் (பாடல் அடி 62 முதல் 96) 99 பூக்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மழை பெய்து நின்றதும் பருவ மகளிர் இவற்றுடன் பிற பூக்களையும் பறித்துவந்து பாறைமேல் குவித்து விளையாடி மகிழ்கின்றனர். பாடலில் உள்ளபடி பூக்களுக்கு வரிசை எண் தரப்பட்டுப் படத்துடன் இத் தளத்தில் உலவ விடப்பட்டுள்ளன. பாடலைப் பாடியவர் கபிலர்.
புதன், 18 மார்ச், 2009
mind rope மனக்கயிறு
வியாழன், 12 மார்ச், 2009
கபிலர் - Kabilar
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய தொகுப்புகளில் கிடைத்துச் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் 2381. அவற்றில் கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் 235. மொத்தப் பாடல்களில் இது எவ்வளவு?
செவ்வாய், 3 மார்ச், 2009
அவன் - நான்
திங்கள், 2 மார்ச், 2009
கண்ணன் - 1
கண்ணில் இருப்பவன் கண்ணன். யார் கண்ணில்? என் கண்ணில். உன் கண்ணில் இருக்கும் கண்ணன் யாரோ! எனக்குத் தெரியவில்லை. நீ கண்ணன் படம் போட்டால் உன் கண்ணில் இருப்பவனைத் தானே போடுவாய். நீ சிலை செய்தால் உன் கண்ணில் இருப்பவனைத் தானே செதுக்குவாய். எல்லாருடைய கண்ணிலும் ஒரே கண்ணன் இருக்கின்றான் என்றால் இந்த உருவங்கள் எல்லாமே ஒன்றாக இருக்க வேண்டுமே!
என் மகன் வெளியூரில் இருக்கிறான். அவன் என் கண்ணில் இருக்கிறான். கண் = கருத்து
ஞாயிறு, 1 மார்ச், 2009
புகழ்
புகழ் என்பது ஒருவருக்குப் பிறர் தரும் வெளிச்சம். வள்ளுவர் புகழை 'ஒளி' என்கிறார்.
கண்ணாடியில் முகம் பார்க்கிறோம். நம் முகத்தில் வெளிச்சம் பட்டால் முகம் நன்றாகத் தெரியும். கண்ணாடியில் மட்டும் வெளிச்சம் பட்டால் நம் முகம் தெரியுமா? காசு கொடுத்து வாங்கும் புகழ் கண்ணாடியில் வீசும் வெளிச்சம் போன்றது. புகழ் நன்னிலத்தில் பெய்யும் மழை போன்றது. ஓடிவிடும். ஊறவும் செய்யும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)