பழமையில் பாடம் படி \ பழமையைப் புதுமையாக்கு \ பைந்தமிழ்ப் பயிர்செய் \ பழந்தமிழ்த் தாய்ப் பேண்
வியாழன், 25 மார்ச், 2010
ஆதன், பூதன்
ஆதன் = உயிர் (organic)
பூதன் = மெய் (inorganic)
ஆகாயம்
ஆ = உயிர்
காயம் = மெய்
'து' = பற்றுக்கோடு
துப்பார்க்குத் துப்பாய
ஆ = ஆதல்
பூ = பூத்தல்
ஆகாயத்தில் உள்ள காயம் பூதங்களாகப் பூக்கிறது.
'மலர் மிசை ஏகினான்' = மலரும் நம் உடம்பில் உயிராகவும், மலரும் நம் அறிவில் எண்ணமாகிய குணத்தானாகவும் சென்றுகொண்டிருப்பவன்.
ஆ + து + அன்
ஆ (< ஆன்(மா) < ஆம் ) + தந்தை = ஆந்தை
பூ (< பூன் < பூம்) + தந்தை = பூந்தை
புதன், 24 மார்ச், 2010
நாதம்
நா + து + அம் = நாதம்
நா = நாக்கு
து = உணவு
நாக்கு கொள்ளும் உணவு சோறு
நாக்கு தரும் உணவு நாதம்
இப்படி 'நாதம்' என்பது தூய தமிழ்ச்சொல் என்று எல்லாருக்கும் தெரிகிறது
இதனை ஆரியம் தனதாக்கிக்கொண்ட உண்மையைத்தான் எண்ணிப் பார்க்க நமக்கு நேரமில்லை
வேதம்
உடலில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற வேது கொடுக்கிறோம்
உள்ளத்தில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற இறைவன் பெயரைச் சொல்லிக்கொள்கிறோம்.
இறைவன் பெயர் உள்ளத்துக்கு வேது
இந்த வேதுதான் வேதம்
வேதம் என்னும் தூய தமிழ்ச்சொல்லை ஆரியம் என்பது விந்தை
செவ்வாய், 23 மார்ச், 2010
ஓம் நமோ நாராயணாய
நாராயணனை ஆழ்வார்கள் நாரணன் என்கின்றனர்.
(ம்) நாராயணாய(ம்) நா .... நார், அ(ண்)ணன் என்னும் 2 சொறகளின் சேர்க்கையே நாராயணன்.
நார் என்னும் தமிழ்ச்சொல் அன்பைக் குறிக்கும்.
ஒப்புநோக்குக - திருக்குறள் - 958
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்.
நாரணன் நமக்கிடையே அன்பாய் விளங்கும் அண்ணன் அல்லவா
நார், ஆய், அணன்
அன்பு ஆகி நம்மோடு அண்மி உள்ளவன்
நா அணரி அண்ணம் ஒற்றல் வருடல் - என்னும்போது 'அண்' என்னும் சொல் இப்பொருளைத் தருவதை உணர்ந்துகொள்ளலாம்.
நாமெல்லாம் நாராயனின் ஆயத்தார், அன்பு ஆகி விளங்கும் ஆயத்தார்
இந்த விளக்கங்களால் நாராயண மந்திரம் தமிழ்வழி மந்திரம் என்பதை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)