எழுதிக் குவிக்கும் வல்லவரே
எழுத்தைப் படிக்கும் நல்லவரே
உழுது வாழும் உழைப்பால்தான்
உண்டு மகிழ்வீர் மறவாதீர்.
பொங்கல் உழவர் திருநாளா
பொங்கல் உழவர்த் தொழுநாளா
(=பொங்கல் உழவரைத் தொழும் நாளா)
எங்கும் இன்பம் எதனாலே
ஏரோர் தந்த கொடையாலே
சேற்றில் காலை வைப்பவரால்
தேசப் பசிநோய் நீங்கிவிடும்
சோற்றில் கையை வைத்திடலாம்
தொழுவோம் உழவே நம்தெய்வம்
1 கருத்து:
நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து போற்ற வேண்டியது உழவு.
உண்மையான உணர்வுள்ள படைப்பு
கருத்துரையிடுக