வெள்ளி, 21 மே, 2010

செருக்கு

விரும்பத்தகாத செருக்கு
யான் எனது எனது என்னும் செருக்கு அறுக்கப்பட வேண்டும் - குறள் - 346
தீவினை என்னும் செருக்குக் கொள்ள விழுமியார் அஞ்சுவர் - குறள் - 201

செருக்கும், சினமும், சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமிதம் நீர்த்து - குறள் - 431
வெண்மை எனப்படுவது ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் - 844

விரும்பத் தகுந்த செருக்கு
உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 598
வேளாண்மை என்னும் என்னும் செருக்கு - குறள் - 613
பொருள், செருநர் செருக்கு அறுக்கும் எஃகு - குறள் - 759
வாழுநம் என்னும் செருக்கு - குறள் - 1193
பகைவர்கண் பட்ட செருக்கு - குறள் - 878
படைச்செருக்கு - குறள் - அதிகாரம் - 78

செவ்வாய், 11 மே, 2010

ஞால்


ஞால், ஞான்றது, ஞாற்சி என்னும் சொல் வடிவங்கள் தொல்காப்பிய உரையில் வருகின்றன.
ஞால் = தொங்கு
ஞான்றது = தொங்கிற்று
ஞாற்சி = காதில் தொங்கும் தொங்கட்டான்.
மண்ஞாட்சி = மண் குணுக்கு
பொன்ஞாட்சி = பொன்வளையம்

ஞாலம் என்னும் சொல்லை ஆராயும்போது தமிழர் உலகம் தொங்குகிறது என்று உணர்ந்திருந்தனர் என்பது புலனாகும்.

உலவுவது உலகம் என்பதும் தமிழரின் அக்கால அறிவியல் நோக்காகந் தென்படுகிறது.

ஞாயிறு, 9 மே, 2010

சுமை

எருமை மாடு சும்பபதுபோல்
எல்லா ரையும்நாம் சுமக்கின்றோம்
அருமை உதவி அதற்காக
அடிமைப் பட்டுக் கிடப்பதுவோ

பொதுவன் அடிகள்