
பெண்யானைக்கு ஆண்யயனை யா மரத்தை வளைத்துத் தின்னத் தருவது போல மாஅல் மரத்தை வளைத்துத் தந்தானான் என்கிறது சங்கப்பாடல்.
வடாஅது
வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போலப்
புன்தலை மடப்பபடி உணீஇயர் அங்குழை
நெடுநிலை யாஅம் ஒற்றி நனைகவுள்
படிஞிமிறு கடியும் களிறே - (அகநானூறு 59. மருதன் இளநாகனார்.)